சென்னை: தமிழகத்தின் முதல்வராகவும், அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராகவும் பதவி வகித்த ஜெயலலிதா கடந்த 5ம் தேதி காலமானார். இதையடுத்து முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பொறுப்பேற்றுகொண்டார். கட்சியின் பொதுச்செயலாளர் பதவியை ஏற்குமாறு ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் சசிகலாவை வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் சசிகலாவுக்கு எதிரான நிலையையும் தமிழகத்தின் பல பகுதிகளில் காண முடிகிறது.

ஜெயலலிதாவின் மரணம் பற்றியும், அப்பல்லோ மருத்துவமனை பற்றியும் சமூக வலைத்தளங்களில் பல தகவல்கள் இப்போது பரப்பப்பட்டு வருகின்றன. ஜெயலலிதா வகித்து வந்த பொதுச்செயலர் பதவிக்கு பெரிய முட்டல் மோதல் தொடங்கியுள்ளது. சசிகலாவே அதிமுகவின் பொதுச்செயலராகக் கூடும் என்ற தற்போதைய அதிமுகவின் நிலை அக்கட்சி தொண்டர்களை கதிகலங்க வைத்துள்ளது.jaya-sasikala

இந்தநிலையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நமது கப்ஸா நிருபருக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது: ஜெயலலிதா உடல் நிலை குறித்து அப்பல்லோ மருத்துமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையே உண்மையானவை. அப்பல்லோ மருத்துவமனை தலைவர் பிராதப் ரெட்டியிடம் அது குறித்து நானே கேட்டறிந்தேன். மறைந்த முதல்வர் ஜெயலலிதா குறித்து பரப்பப்படும் அனைத்து எதிர்மறை கருத்துக்களும் சிலரால் திட்டமிட்டு பரப்பப்படும் வதந்தி தான், இதை நேற்று எனது கனவில் ஜெயலலிதாவின் ஆவியே என்னிடம் சொன்னது. மேலும் தனது உடன்பிறவா சகோதரி சசிகலா விரைவில் அதிமுகவின் தலைமை பொறுப்பேற்று அதிமுகவையும் அதன் தொண்டர்களையும், தமிழக மக்களையும் காக்க வேண்டும் என்றும் அம்மாவின் ஆவி கட்டளையிட்டது, இனி யாருக்கும் எந்தக் குழப்பமும் இல்லை, நான் நாளை மறைந்த துக்ளக் ஆசிரியர் சோ அவர்களின் ஆவியை சந்திக்க இருக்கிறேன் என்று என்று கூறி  பேட்டியை நிறைவு செய்தார்.

There are no comments yet