சென்னை: அஇஅதிமுக வின் அடுத்த பொதுச் செயலாளராக சசிகலாவைக் கொண்டு வருவதற்கான பிரம்மப் பிரயத்தனத்தில் தமிழ் நாட்டின் பல ஊடகங்களும் இன்று ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றன. அதிமுகவில் ‘சின்னம்மா’ யார் என்பது தொடர்பான போஸ்டர் யுத்தம் மும்முரமாக நடைபெறுகிறது. அதிமுகவில் ‘சின்னம்மா’ சசிகலாதான் தலைமை ஏற்க வேண்டும் என்ற கருத்து திணிக்கப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் அதிமுக தொண்டர்களில் ஒரு பகுதியினர் தீபாவையே ‘சின்னம்மா’ என அழைத்து போஸ்டர்கள் அடித்து வருகின்றனர்.

இந்நிலையில் வெளி மாநிலத்தில் பிறந்த ஒருவர் தான் எப்போதும் அதிமுகவின் பொதுச் செயலாளராக வேண்டும் என்று தீபா கூறியிருக்கிறார். அவர் நமது கப்ஸா நிருபருக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: சசிகலாவை முன்னிறுத்துபவர்கள் ஒரு விஷயத்தை கவனிக்க மறுத்தும், தவறியும் வருகின்றனர். அதுதான் அஇஅதிமுக வின் சட்ட திட்ட விதிகள். இதன்படி சசிகலா தற்போதைக்கு அஇஅதிமுக வின் பொதுச் செயலாளராக வர முடியாது என்பதுதான் யதார்த்தம். எம்ஜிஆரால் துவக்கப் பட்ட அஇஅதிமுக வின் சட்டதிட்ட விதிகள் 1.11.1976 ல் பெரியளவில், விரிவாக உருவாக்கப்பட்டது. அதற்கு கடைசியாக திருத்தங்கள் அதாவது amendment மேற்கொள்ளப் பட்டது 5.2.2007-ல். AIADMK Rules and Regulations 2007 … இதில் Section 30 (5) என்ன சொல்லுகிறது என்றால், Those who want to contest for the post of office bearers in the Organization should have been born outside of Tamilnadu . The General Secretary is vested with the power to relax this. அதாவது அஇஅதிமுக வின் சட்ட திட்ட விதிகள் பிரிவு 30, உப பிரிவு 5 ன் படி கட்சியின் நிருவாகிகள் பதவிக்கு வர போட்டியிடுபவர்கள் தமிழ்நாட்டுக்கு வெளியே பிறந்திருக்க வேண்டும். இதற்கு விலக்கு அளிக்கும் அதிகாரம் கட்சியின் பொதுச் செயலாளருக்கு மட்டுமே உண்டு.sasikala

கேரளாவில் பிறந்த எம்ஜிஆர் மற்றும் கர்நாடகாவில் ஜெயலலிதா பிறந்த இருவருமே தமிழ்நாட்டில் பிறக்கவில்லை, இதனால் ஒவ்வோர் முறையும் போட்டியின்றித்தான் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கின்றனர். ஆனால் சசிகலா தமிழ்நாட்டில் பிறந்ததால் பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிட தகுதியற்றவர்.

இதை மாற்ற பொதுச் செயலாளர் ஒருவரால் மட்டுமே முடியும். இன்று அஇஅதிமுக வின் பொதுச் செயலாளர் காலமாகி விட்டார். அப்படியென்றால் எப்படி விதிவிலக்கு கொடுக்கப்பட முடியும்? இதனையும் மீறி வேறு ஒரு நடைமுறையை கடைபிடிக்கலாம் என்று சிலர் கூறுகின்றனர். அதாவது கட்சியின் அவைத் தலைவர் தலைமையில் பொதுக் குழுவைக் கூட்டி அஇஅதிமுக வின் சட்ட, திட்ட விதி 30, உப விதி 5 க்கு திருத்தம் கொண்டு வந்து அதன்படி சசிகலாவை பொதுச் செயலாளராக ஆக்கலாம். ஆனால் இது அவ்வளவு சுலபமல்ல. காரணம் இந்த விதி தெளிவாகவே இந்த திருத்தத்தை மேற்கொள்ளும் அதிகாரம் பொதுச் செயலாளருக்குத்தான் இருக்கிறது என்றே சொல்லுகிறது. எனவே அடுத்த ஜென்மத்தில் சசிகலா கேரளா, ஆந்திரா, கர்நாடக மாநிலங்களில் பிறந்ததுதான் அதிமுகவின் பொதுச் செயலாளர் ஆக முடியும் என்று அவர் கூறினார்.

There are no comments yet