சென்னை: ஜெயலலிதாவின் உடல்நிலை மெதுவாகவே மோசம் அடைந்துவந்தது. இதை உணராத அளவு அவர் முட்டாள் இல்லை. யாரையும் வாரிசாக எம்ஜிஆர் அறிவிக்கவில்லை; தானும் அறிவிக்கும் எண்ணமில்லை என்பதைப் பல ஆண்டுகளுக்கு முன்னரே ஒரு நேர்காணலில் அவர் தெளிவுபடுத்திவிட்டார். அறிவிக்காமல் இருந்தால் இப்போது நடப்பதுதான் நடக்கும் என்பது ஊகிக்க முடியாதது அல்ல. ஒன்று, இதையே அவர் விரும்பினார் அல்லது தனக்குப் பிறகு என்ன நடக்கும் என்பதுபற்றி அவருக்கு அக்கறையில்லை. ஜெயலலிதாவின் அண்ணன் வாரிசுகளைவிட, சசிகலாவுக்குக் கூடுதல் அரசியல் அனுபவம் உண்டு, கட்சியில் பிடி உண்டு. கட்சிக்கு அது விரும்பும் பாதையில் சென்று தாக்குப்பிடிக்கவோ அழிந்துபோகவோ உரிமை உண்டு. அழிந்தால் அரசியலில் புதியன புகட்டும். தமிழ் மக்களுக்குப் பெரிய இழப்பு எதுவும் இல்லை.

சசிகலாவுக்கு 34 வயதாகும் போது ஜெயலலிதாவின் வாழ்வில் சுமார் 30 வருடங்களுக்கு முன்பு நுழைந்தார். அப்போது முதல் அனைவருக்கும் தெரிந்தது அவர் ஜெயலலிதாவின் தோழி, பாதுகாவலர் என்பது மட்டும் தான். இரண்டு முறை மனத்தாங்கல் ஏற்பட்டு சிறிது காலம் பிரிந்து இருந்தாலும் இதுநாள் வரை ஜெயலலிதாவின் நிழலாக பின்தொடர்ந்து வந்துள்ளார், அது நல்ல நேரங்களாக இருந்தாலும், சிறைவாசத்தின்போதும் கூட…sasi2-09-1481300438

சசிகலாவுக்கென்று தனி வாழ்வு இல்லை, ஜெயலலிதாவின் சகோதரியாக, ஒரு தாயாக வாழ்ந்து அவரை ஒரு குழந்தை போல கவனித்து கொண்டார். தனது தாம்பத்ய வாழ்வைக்கூட தியாகம் செய்தார். போயெஸ் தோட்டமே அவருக்கு அயோத்தி போல எண்ணினார். ஜெயலலிதாவின் ஒரே உறவினர் சசிகலா தான். ஒரு பேரிளம் பெண்ணாக ஜெயாவின் வாழ்வில் நுழைந்தவர், இன்று முதுமை எய்தி ஜெயாவின் தோழி என்ற ஒற்றை அடையாளத்துடன் நிற்கிறார்.

ஊடகங்கள் சித்தரிப்பது போல சசி, ஜெயாவின் ‘தோழி’ அல்லது ‘நண்பி’ மட்டுமல்ல.. ‘அதுக்கும் மேல’ அதிமுகவின் அனைத்து நடவடிக்கைகளிலும், வேட்பாளர் தேர்வின் போதும் கூடவே இருந்து முடிவுகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. இந்தியன் எக்ஸ்பிரஸ் ஒரு செய்தியில் சசியை குறைத்து மதிப்பிடுவது முட்டாள் தனம், அவர் அரசியல் அறிவு மிக்கவர், தெளிவான முடிவுகள் எடுப்பதில் வல்லவர், ராஜதந்திரம் கற்றவர் என்று கூறுகிறது.

அனுபவம் இல்லாதவர்கள் வாரிசு அரசியல் செய்யும் இந்தக் காலத்தில், 25 வருடம் ஜெயாவின் நிழலாக தொடர்ந்தவருக்கு அரசியல் தெரியாதா, அப்படிச் சொன்னால் யாரும் நம்புவார்களா? இந்த தகுதி ஒன்றே போதும் அவர் அதிமுகவை வழிநடத்திச் செல்ல.

ஜெயாவின் இறுதிக்காலத்தில் சசி நினைத்திருந்தால் நரித்தனத்தை காட்டி இருக்கலாம். ஜெயலலிதாவை நிர்க்கதியாக விட்டுவிட்டு கிடைத்ததை சுருட்டிக் கொண்டு ஓடிவிட்டிருக்கலாம். பல்வேறு சூழ்ச்சிகளுக்கு இடையே ஜெயாவை காத்து கடைசிவரை நின்றவர் சசிகலா.

‘மன்னார்குடி மாஃபியா’ என்று மீடியாக்களால் கேலி செய்யப்படும் சசிகலாவின் குடும்பத்தினர் ஜெயலலிதாவின் இறுதிச்சடங்கில் நேரடி ஒளிபரப்பு என்று கூட தெரியாமல் செய்த கோமாளித்தனங்கள் ஒருபுறமிருந்தாலும், சசிகலாவின் மன வலிமைக்காக அவரால் சகித்துக் கொள்ளப்பட்டார்கள் என்றே கொள்ளலாம்.sasikala

சசிகலாவின் எதிர்காலத்தை இப்போதே கணித்துவிட முடியாது… அழிச்சட்டியமாக அவர் குடும்பத்தினருடன் அதிமுகவை கைப்பற்ற நினைத்தாலும் மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு, 1991-1996 போல தக்க பாடம் புகட்டுவார்கள், அதிகமுவை கண்காணிக்க, சீரமைத்து வழிநடத்தி மக்கள் விரோத அரசியலை முன்னெடுக்காமல் தடுக்க வலுவான எதிர்க்கட்சியாக திமுக திகழ்கிறது. வரலாறு, செய்திகளை பதிவிட்டு வைத்து பாடம் புகட்டும் தன்மை உடையது, வரலாறு கதாநாயகர்களை வில்லன்களாகவும் வில்லன்களை கதாநாயகர்களாகவும் மாற்ற வல்லது.

There are no comments yet