சென்னை: தி.மு.க தலைவர் மு. கருணாநிதி 15 டிச. இரவு 11.30 மணியளவில் மூச்சுத் திணறல், நுரையீரல் தொற்றின் காரணமாக சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். கருணாநிதிக்கு ஒவ்வாமை ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும், அவரைப் பார்க்க வரவேண்டாம் என்றும் திமுக சார்பில் அக். 25ஆம் தேதி கூறப்பட்டது. அதன் பின்னர் ஒரு வாரகால சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பிய கருணாநிதி மீண்டும் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருப்பதால் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மருத்துவமனைக்கு நேரில் சென்று நலம் விசாரித்து வருகின்றனர்.

அங்கு வார்டு பாய் வேடத்தில் செய்தி சேகரிக்கச்சென்ற கப்ஸா நிருபரிடம் கருணாநிதியின் மகனும் அரசியல் வாரிசுமான ஸ்டாலின் பழைய வரலாற்றை மலரும் நினைவுகளாக எண்ணிப்பார்த்து அளித்த பேட்டி: “எனது தந்தை இங்கு கொண்டுவந்த போது ‘ஆக்சிஜன்’ தர சற்று தாமதப்படுத்தி விட்டனர். தமிழை மூச்சாக சுவாசிக்கும் முத்தமிழ் அறிஞர் கலைஞருக்கு அது இழுக்காகி விடும் என்று பயந்து விட்டனர். ‘மாணவ நேசன்’ என்ற கையெழுத்து பத்திரிகையில் தொடங்கி மக்களின் தலைஎழுத்தை ‘அலங்கோல’ எழுத்தாக மாற்றி அமைத்தவர் கருணாநிதி. அவர் தொண்டர்களின் கழுத்தில் கருப்புசிவப்பு துண்டு போட வைக்க ‘துண்டு’ பிரசுரமாக ஆரம்பித்த ‘முரசொலி’ பிறகு கட்சிப் பத்திரிகையாக உருவெடுத்து, மக்கள் உயிரை எடுத்துக் கொண்டிருக்கிறது. கையில் கொப்புளங்கள் வந்ததால் கடிதம் எழுதுவதை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளார்.Kaunas - Stalin

இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் சாலை போட வைத்திருந்த ‘தார்’ பீப்பாய்களை விளம்பரப் பதாகைகளுக்கு தாரை வார்த்தவர். இல்லாவிட்டால் தமிழகத்தில் எப்போதோ சாலைகள் சீர்பட்டிருக்கும். ‘நெஞ்சுக்கு நீதி’ யை முரசொலியிலும் குங்குமம் பத்திரிகையிலும் தொடர்ந்து எழுதியவரின் நெஞ்சுக்கு இன்று இம்மியளவு ‘பிராண வாயு’ இல்லை என்கிறார்கள், இது என்ன அநியாயம். இன்றைய மாநகரப் பேருந்து பல்லவன் பேருந்தாக இருந்த காலத்தில் பள்ளி மாணவர்கள் ஐந்து மார்க் வாங்க திருக்குறளை எழுதச் செய்தார். முல்லைக்கும் முட்டாய்க்கும் முடிச்சு போடும் விதாமாக ‘பேரிஸ்’ என்ற மிட்டய் கம்பெனி பெயரில் தெரு இருந்ததை ‘பாரி’ முனை என்று ஆக்கினார். ஈழத்தமிழ் படுகொலையின் போது உலகெங்கும் உள்ள தமிழர்கள் அந்தப் படுகொலையை தடுத்து நிறுத்துவார் என்று எதிர்பார்த்தனர், ஆனால் பதவி பெரிது என்று கருதி அவர்களுக்கு கருமாதி முடியும் வரை மவுன விரதம் இருந்து விட்டு, கொன்று குவித்ததும் ‘மழை விட்டாலும் தூவானம் விடவில்லை’ என்று எதுகை மோனையில் பேட்டி கொடுத்து அரை மணி நேரம் கின்னஸ் சாதனை உண்ணாவிரதம் இருந்தார்.

பிறர் மீது பழி சுமத்தி தப்பித்து கொள்ளும் குள்ளநரி தந்திரத்தில் கெட்டிக்காரர் என் தந்தை அவருக்கே ‘ஆக்சிஜன்’ இல்லை என்கிறார்கள், முன்பு கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பிய ‘தமிழர்களே தமிழர்களே நீங்கள் என்னை கடலில் தூக்கிப் போட்டாலும் கட்டுமரமாகத்தான் மிதப்பேன், கவிழ்ந்து விட மாட்டேன்’ என்ற விளம்பரத்திற்கேற்ப ‘கடல்’ என்ற பெயரில் உள்ள மருத்துவமனை சென்னையில் இல்லாத்தால் இந்த பாழாய்ப்போன ‘காவேரி’ ஆற்றில் கொண்டு வந்து வைரம் பாய்ந்த 93 வயதான் என் தந்தையை போட்டோம்.. முன்னர் விவசாயிகள் தண்ணீர் பிரச்சினையின் போது என் தந்தையை வாழ வைத்த காவிரி இந்த முறை கைவிடாது என்று நம்பித்தான் இங்கு வந்தோம்” என்று கண்ணீர் சிந்தினார்.

பகிர்

There are no comments yet