சென்னை: தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு நேற்று இரவு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது. இதையடுத்து அவர் உடனடியாக சென்னை ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தொண்டை மற்றும் நுரையீரல் தொற்று ஏற்பட்டிருப்பதாகவும், அதற்கான சிசிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவர்களின் சிகிச்சைக்கு பின்னர் கருணாநிதியின் உடல் நிலை சீராக உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து அரசியல் கட்சி தலைவர்கள் கருணாநிதியை சந்தித்து உடல் நலம் விசாரித்து வருகின்றனர். அவரது உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் இன்று மாலை சற்று உடல்நிலை தேறிவந்த நிலையில் சிறிது நேரம் பாட்ஷா படம் பார்த்ததாக செய்திகள் வெளியாயின. இது குறித்து மருத்துவனைக்கு வெளிய காத்துக் கிடந்த உடன்பிறப்பு சொல்லும்போது ‘எங்க தலைவர் ரெம்ப வித்தியாசமானவர், எல்லோரும் சினிமாவை தியேட்டரில் தான் பார்ப்பார்கள், அனால் என் தானை தலைவர் ஆபரேஷன் தியேட்டரிலேயே சினிமா பார்ப்பார். ஆபரேஷன் தியேட்டரிலேயே பாட்ஷா பார்த்து பஞ்ச் டயலாக் பேசுவார். தலைவர் ஒரு தடவ ஆட்சிக்கு வந்தாலே..நூறு தலைமுறைக்கும் காசு பார்த்துடுவார், அவர் நல்ல படியா தேறி வரணும் என்று கவலையுடன் சொன்னார்.

There are no comments yet