சென்னை:ஜெயா சாவுக்கு காரணமான மருத்துவர்களை கடுமையாக தண்டிக்கவும் புதிய சட்டம் தேவை என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக இன்று விஜயகாந்த் நமது கப்ஸா நிருபரை சந்தித்தபோது கூறியதாவது: தமிழகத்தின் பல இடங்களில் போலி மருத்துவர்கள் கருக்கலைப்பு சம்பவம் மற்றும் ஸ்கேன் நிலையங்களில் செயல்படுவதை அனைவரும் அறிவர்.

ஆனால் அப்பல்லோவில் அநியாயமாக இறந்து போன முதல்வர் ஜெயலலிதாவின் மருத்துவர்களின் சான்றிதல்களை சரி பார்த்தார்களா? அவருக்கு மருத்துவம் செய்ய லண்டனில் இருந்த வந்த டாக்டர் ரிச்சர்ட் பீலே எம்.பி.பி.எஸ் எங்கு படித்தார் என்று யாரும் கேட்டார்களா? இதற்கெல்லாம் காரணம் முந்தைய ஜெயாவின் அடாவடி அரசின் அலட்சியம் தான்.actor-vijayakanth

அப்பல்லோவில் நோயாளிகளை விட டாக்டர்கள் நிறைய இருக்கிறார்கள். அவர்கள் ரஷ்யாவிலும், சீனாவிலும் படித்தவர்கள் என் நான் கேள்விப்பட்டேன். அவர்களை அனைவருமே போலி டாக்டர்களோ என்று எனக்கு சந்தேகம் வருகிறது. இதற்காகாகவே என் மனைவி உத்திரவுப்படி நான் சிங்கப்பூருக்கு சென்று சிகிச்சை செய்து கொள்கிறேன், நல்ல வேலை கலைஞரை காவேரியில் சேர்த்துள்ளார்கள். என் மனைவி கேட்டுக்கொண்டால் கலைஞரை சென்று பார்ப்பேன் என்று கூறி பேட்டியை முடித்தார்.

There are no comments yet