படம் நன்றி: விகடன்

சென்னை: கடந்த, 2011 சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., வுடன் கூட்டணி அமைத்து, எதிர்க்கட்சி அந்தஸ்தை, தே.மு.தி.க., பெற்றது. தொடர்ந்து வந்த உள்ளாட்சி தேர்தலில், தே.மு.தி.க.,வை ஜெயலலிதா கழற்றி விட்டார். அதன்பிறகு, நடந்த தேர்தல்களில், தே.மு.தி.க., படுதோல் வியை சந்தித்து வருகிறது. இதனால், விரக்தி அடைந்து, கட்சியில் இருந்து பலரும் வெளியேறி வருகின்றனர்.

சமீபத்தில் நடந்த, மூன்று சட்டசபை தொகுதி தேர்தலிலும், தே.மு.தி.க.,வால், 2 சதவீத ஓட்டுகளைக் கூட பெற முடியவில்லை. இந்நிலையில், இரண்டு நாட்களாக, கட்சி நிர்வாகிகளுடன், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் ரகசிய ஆலோசனை நடத்தி வருகிறார். வரும் லோக்சபா தேர்தலில், வெற்றி கூட்டணி அமைக்கப் போவதாக, நிர்வாகிகளிடம் விஜய காந்த் கூறியுள்ளார். இதையடுத்து, மாவட்ட நிர்வாகிகளிடம், மாநில நிர்வாகிகள், சில தகவல் களை கூறி வருகின்றனர்.

அதாவது, ‘அ.தி.மு.க.,வில், தற்போது செல்வாக்கு பெற்றுள்ள குடும்பத்தினர் தான், 2011 சட்டசபை தேர்தலில், நம்மை கூட்டணிக்கு அழைத்தனர். சமீபத்திய சட்டசபை தேர்தலில், தே.மு.தி.க., எடுத்த கூட்டணி முடிவால் தான், அ.தி.மு.க., வால் ஆட்சிக்கு வர முடிந்தது; இதெல்லாமே, அவர்களுக்கு தெரியும். எனவே, லோக்சபா தேர்த லில், நம்மை நிச்சயம் ஏற்றுக்கொள்வர்’ என, கூறியுள்ளனர்.vijayakanth

மேலும், விஜயகாந்த் மனைவி பிரேமலதாவிற் கும், அ.தி.மு.க.,வை சேர்ந்த முக்கிய பெண் பிர முகருக்கும் இடையே உள்ள, பழைய நட்பு தொடர்வதாகவும், அவர்கள் கூறியுள்ளனர். அந்த பெண் பிரமுகர், சென்னை, ஆர்.கே.நகர் தொகுதி யில் போட்டியிட்டால், தே.மு.தி.க., ஆதரவளிக்கும் வாய்ப்பு வந்துள்ளது என்றும் கூறியுள்ளனர்.

இதன் பேரில், மனைவி பிரேமலதா தந்த ஆலோசனைப்படி, சின்னம்மா சசிகலாவை சந்தித்து ஆறுதல் சொல்லவும், அடுத்த அதிமுக பொதுச் செயலாளராக ஆதரவு தெரிவிக்கவும் இன்று காலை புறப்பட்டதாகவும், ஆனால் வழி ‘தடுமாறி’ சமீபத்தில் ஜெயலலிதாவால் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ராஜ்ய சபா எம்பி சசிகலா வீட்டுக்கு போய் அங்கு அவரைப் பார்த்து மிரண்டு திரும்பி வந்ததாகவும் நம்பத்தகாத செய்திகள் தெரிவிக்கின்றன

There are no comments yet