தமிழகத்தை மனநலம் பாதித்த மாநிலமாக அறிவிக்க வேண்டும், மோடியை சந்தித்த ஓ.பி.எஸ் வேண்டுகோள்

1215

புது டெல்லி: மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு பிறகு பதவியற்றுக் கொண்ட தற்போதைய முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் பிரதமர் மோடியை சந்தித்து ‘வார்தா’ புயல் பாதிப்புக்கு ரூ.22,573 கோடி நிவாரணம் தேவை என்று பிரதமர் மோடியிடம் கோரிக்கை விடுத்தார். மேலும் மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு இந்தியாவின் உயரிய விருதான ‘பாரத் ரத்னா’ விருது வழங்க வேண்டும், அன்னாரின் முழு உருவச்சிலை பாராளுமன்ற வளாகத்தில் நிறுவப்பட வேண்டும் என்ற வேண்டுகோளும் விடுத்தார்.

சந்திப்பிற்கு பிறகு பழக்க தோஷத்தில் பாரளுமன்ற வளாகத்தில் உள்ள கேண்டீனுக் சென்று தேனீர் குடித்தார், அண்டு டேபிள் துடைப்பவர் போல நமது கப்ஸா நிருபர் மாறுவேடத்தில் பன்னீர்செல்வம் டீ மாஸ்டரிடம் பேசிக் கொண்டிருந்ததை ஒட்டுக் கேட்டு சேகரித்த செய்தியில் ஓபிஎஸ் கூறியதாவது: “பிரதமரிடம் கேட்ட தொகையில் 573 கோடியை சில்லறையாகவும் மீதி தொகையை பதுக்க வசதியாக புதிய 2000 ரூபாய் நோட்டுக்களாவும் கேட்டுள்ளேன். தமிழ்நாட்டில் ஒரே குழப்பமான சூழ்நிலையாக இருக்கிறது எல்லோருக்கும் கிறுக்கு பிடித்துள்ளது, சசிகலா ஜெயலலிதா கூடவே இருந்தேன் அதனால், நான்தான் பொதுச்செயலாளர் என்கிறார். நீதிபதி கூடவே இருப்பதால் நீதிபதி இறப்பிற்கு பிறகு டவாலி அந்த சீட்டுல உட்கார முடியுமா? அதிமுக வில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா புஷ்பா அம்மாவின் மரணத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்கிறார்.. ராமதாஸ் மருத்துவமனையின் கேமரா பதிவுகளை கேட்கிறார். opsமுன்பு திமுகவில் இருந்த வைகோ வை திமுக காரனே செருப்பால் அடிக்கிறான். கருணாநிதி காவேரிக்கும் வீட்டுக்குமாக வாலி பால் விளையட்டுப் போல மாறி மாறி அலைந்து கொண்டிருக்கிறார். உடல் நலக் குறைவால் மறைந்த முதல்வரை ராஜீவ் காந்தியின் படுகொலையுடன் இளங்கோவன் ஒப்பிடுகிறார், அதற்கு திருநவுக்கரசர் இளங்கோவனை மனநலம் பாதிக்கப்பட்டவர் என்கிறார். வைகோவின் கற்பனை பேச்சுக்கு பதிலளிக்கத் தேவை இல்லை என்று ஸ்டாலின் பிதற்றுகிறார். பொது மக்களோ புதிய இரண்டாயிரம் தாளை வைத்துக் கொண்டு குணா கமல் போல சில்லரை மாற்ற அலைந்து கொண்டிருக்கிறார்கள். இத்தனை பேச்சுக்களையும் கேட்டுக் கொண்டு முதல்வர் பதவியில் என்னால் நிம்மதியாக இருக்கமுடியவில்லை என்று தான் டெல்லிகு பிரதமர் மோடியை தேடி ஓடி வந்துவிட்டேன், மற்ற கோரிக்கைகளுடன் தமிழக மாநிலத்தை ‘மனநலம்’ பாதித்த மாநிலமாக அறிவிக்க வேண்டும், டாஸ்மாக்கிற்கு இணையாக அம்மா மனநல மையங்களை நிறுவ அனுமதி கோரியும் டெல்லிக்கு வந்தேன் என்று விட்டத்தை பார்த்து இப்போதே முதல்வர் பதவி பறிபோனவர் போல சிரித்தார்.

பகிர்

There are no comments yet