சென்னை: தி.மு.க., தலைவர் கருணாநிதி, சென்னை, ஆழ்வார்பேட்டை, காவேரி மருத்துவமனை யில், ஆறாவது நாளாக சிகிச்சை பெற்று வரு கிறார். செயற்கை சுவாசத்திற்காக,டிராக்கி யோஸ்டமி’ சிகிச்சை தரப்படுகிறது. அரசியல் கட்சி தலைவர்கள், மருத்துவ மனைக்குசென்று, நலம் விசாரித்து வருகின்றனர்.

நடிகர் விவேக், இயக்குனர் எஸ்.ஏ.சந்திர சேகர், திண்டுக்கல் லியோனி உள்ளிட்டோர், மருத்துவ மனைக்கு சென்றனர். முன்னாள் மத்திய அமைச் சர், அழகிரி, மாநில மகளிர் அணி செயலர் கனி மொழி ஆகியோரிடம், கருணாநிதியின் உடல் நலம் குறித்து விசாரித்தனர்.

தி.மு.க., பொருளாளரும், இளைஞர் அணி தலைவர் முதியவர் ஸ்டாலின் நமது கப்ஸா நிருபரிடம் கூறும்போது, ”சிகிச்சையில் நல்ல முன் னேற்றம் ஏற்பட்டு, அப்பாவின் உடல் நலம், நன்றாக தேறிவருகிறது. நோய் தொற்று ஏற்படாதிருக்க, பார்வையாளர்கள், அவரை சந்திப்பது தவிர்க்கப்பட்டுள்ளது; விரைவில், வீடு திரும்புவார். சிகிச்சை முடிந்து, இன்று வீடு திரும்புவார் என, எதிர் பார்த்த்தோம் ஆனால், சின்னம்மா ‘சசி’த்தொல்லை நாட்டில் அதிகரித்துள்ளதால், அவர் அதிமுக பொதுச் செயலாளராக பெயர்ச்சி ஆன பின்னர் அப்பாவை டிஸ்சார்ஜ் செய்வது குறித்து டாக்டர்கள் முடிவு செய்வர். அதனால், கலைஞர் வீடு திரும்பவது தாமதமாகும் அதுவும் சின்னம்மா கையில் தான் உள்ளது, அதுவரை நான் செயல் தலைவர் இல்லை என்று வருத்தத்துடன் கூறினார்.

There are no comments yet