சென்னை: காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட திமுக தலைவர் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து டிச 22 தேதி வாக்கில் அவர் வீடு திரும்புவார் என்று திமுக செயல் தலைவர் தளபதி ஸ்டாலின் தெரிவிதுள்ளார். மறைந்த முதல்வர் ஜெயலலிதா இறப்பதற்கு முன்பு 75 நாட்கள் சிகிச்சை பெற்ற போது ஜனாதிபதி, ஆளுனர் கூட சந்திக்க முடியவில்லை அந்த அளவிற்கு அவர் உடனிருந்தவர்கள் கெடுபிடி செய்தனர். ஆனால் கருணாநிதியை சந்திக்க எந்த வித கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை, வைகோ மட்டுமே திருப்பி அனுப்பப்பட்டார், மற்றபடி கருணாநிதியை சந்தித்து நலம் விசாரித்தவர்களுள் புதுச்சேரி முதல்வர் நாராயண சாமி, வாசன், விக்கிரமராஜா, குமரி அனந்தன், நடிகர்கள் விஷால், வடிவேலு விவேக், இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர், திண்டுக்கல் லியோனி அடக்கம்.

கருணாநிதி உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படுள்ளதால் ‘நமக்கு நாமமே’ பயணம் சீசன் 2 ஆரம்பித்து, கல்யாணம், காது குத்து, மஞ்சள் நீராட்டு விழா போன்ற தமிழகத்தின் முக்கிய நிகழ்வுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஸ்டாலின் கப்ஸா நிருபரிடம் கூறும்போது: அதிமுக காரர்கள் பிழைக்கத் தெரியாதவர்கள், ஜெயலலிதாவை பார்க்க வந்தவர்களிடம் வசூல் வேட்டை நடத்த தெரியாதவர்கள்.. மருத்துவமனைக்கு வருபவர்களைத் தடுக்க ஜெயாபோல், தலைவர் கண்ணாடி அலமாரி புத்தகமல்ல, திறந்த புத்தகம், அதே போல் எங்கள் திமுக கருவூலப் பெட்டியும் எப்போதும் திறந்திருக்கும், கோபாலபுரம் வீட்டுக் கதவுகள் போல…எனவே தலைவர் கலைஞரை ‘நலம்’ விசாரிக்க வருபவர்கள் ‘பழம்’ வாங்கிவராமல் ‘பணமாக’ கொண்டு வந்து காவரி மருத்துவமனையில் இருக்கும் உண்டியலில் கட்சி நிதி செலுத்த வேண்டுமாய்க் கேட்டுக்கொள்கிறேன்,” என்றார்.

பகிர்

There are no comments yet