சென்னை: நடிகர் ரஜினியின் மனைவியும் நடிகர் தனுஷின் மாமியாருமான லதா சென்னை கிண்டியில் நடத்தும் ‘ஆஷ்ரம்’ பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு கடந்த ஆறு மாதங்களாக சம்பளம் கொடுக்கவில்லை என்ற செய்தி வெள்யாகியுள்ளது. டிச. 19 தேதியில் அங்கு பணிபுரியும் ஆசிரியர்கள் முற்றுகைப் போரட்டம் நடத்தியுள்ள செய்தியும் இப்பொழுது அம்பலமாகியுள்ளது. பள்ளி வாகன ஓட்டுனர்கள் வாசல் முன் வரிசையாக வேங்களை நிறுத்தி முற்றுகைப் போராட்டம் நடத்தினர், ஆசிரியர்கள் வளகத்திற்குள்ளாகவே உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினர். பின்னர் பேச்சுவார்த்தைக்குப் பின்னர் கலைந்து சென்றனர்.
அதுவரை அங்குள்ள ஆசிரம மரத்தடியில் மூலிகை பறித்தபடி இருந்த நமது கப்ஸா நிருபரிடம் லதா ரஜினிகாந்த் தன்னிலை விளக்கம் அளித்தார்: “பத்திரிகையாளராக இருந்த நான் பேட்டி எடுக்கச்சென்றபோது ரஜினியை கவர்ந்து அவரது மனைவியானேன். மெல்ல மெல்ல அவரது புகழ் உயர்ந்து பெரும் பணக்காரர் ஆன உடன் பணத்தை பன்மடங்காக்க ‘ஆசிரம்’ என்ற பெயரில் வேளச்சரியிலும், கிண்டியிலும் அப்போது பிரபலமாக இருந்த ஸ்கூல் பிசினஸ் ஆரம்பித்து அமோக லாபம் ஈட்டி வருகிறேன். சென்னை வரும்போது என் கணவரை சந்திப்பதால் பிரதமர் மோடியை எனக்கு பிடிக்கும், அவரது ‘கேஷ்லெஸ்’ எக்கானமியை பல ஆண்டுகளாகவே நான் கடைபிடித்து வருகிறேன், அதாவது ஆறு மாதத்திற்கு ஒருமுறை சம்பளம் தருவதில்லை. தற்போது புதிதாக வேலைக்கு சேர்ந்த சிலருக்கு இது தெரியாததால், பிரச்சினை செய்து விட்டனர். என் கணவர் மகள் வயதுடைய பெண்ணுடன் சினிமாவில் டூயட் பாடி கலைப்போலியாக வலம் வந்தாலும், என் பள்ளியில் சினிமா பாடல் போட அனுமதியில்லை அது எனது கல்விப் போலித்தனம், அதுபோல் மக்களை கேஷ் லெஸ் எக்கானமிக்கு தயார் படுத்தவே சம்பளம் கொடுக்காமல் வேலை வாங்குகிறேன். ஆசிரமத்தில் குருகுல முறையில் பள்ளி நடத்தும் நான் பள்ளியை சுத்தம் செய்யும் வேலைகளையும் ஆசிரியர்களுக்கு கூடுதலாக கொடுத்து ஜனாதிபதி விருது, நல்லாசிரியர் விருது வாங்கி பள்ளிக் கல்வித்துறைக்கு சிறுமை சேர்ப்பேன்” என்றார்.
There are no comments yet
Or use one of these social networks