சென்னை: கடந்த, 2006 சட்டசபை தேர்தலில், தே.மு.தி.க., தனித்து போட்டியிட்டு, 8.38 சதவீத ஓட்டுகளை பெற்றது. பின், 2011 தேர்தலில், அ.தி.மு.க., வுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட தே.மு. தி.க., 29 எம்.எல்.ஏ.,க்களை பெற்றதால், எதிர்க்கட்சி அந்தஸ்து கிடைத்தது. அப்போது, தே.மு.தி.க., ஓட்டு சதவீதம், 7.88 ஆக குறைந்தது.பின், 2014 லோக்சபா தேர்தலில், பா.ஜ., வுடன் கூட்டு சேர்ந்த, தே.மு.தி.க., படு தோல்வி அடைந்தது; ஓட்டு சதவீதம், 5.13 ஆக சரிவடைந் தது. கடந்த சட்டசபை தேர்தலில், ம.ந. கூட்டணி யில் இடம்பெற்ற, தே.மு.தி.க., ஓட்டு சதவீதம், 5 சதவீதத்துக்கு கீழ் சரிந்தது. ’50 லட்சம் உறுப்பினர் கள் உள்ளனர்’ என, அக்கட்சி தலைமைகூறி வருகிறது.

ஆனால், தொடர்ந்து ஓட்டு சதவீதம் குறைந்து வரு வதால், உறுப்பினர்கள் எண்ணிக்கையை தெரிந்து கொள்ள, விஜயகாந்த் முடிவு செய்துள்ளார். இதற்காக, அவர் உட்கட்சி தேர்தல் அறிவிப்பை வெளியிட்டு, உறுப்பினர் அட்டையை புதுப்பித்து கொள்ளும்படி, கட்சி யினருக்கு உத்தர விட்டுள்ளார். அனால் உள்கட்சி தேர்தலில் கள்ள ஓட்டு போட்டு கலவரம் ஏற்படுத்த தி.மு.க முயற்சி செய்வதாக உள்துறை ரகசிய போலீஸ் தகவல் கொடுத்ததை அடுத்து எப்படித்தான் தனது கட்சி ஊர்உறுப்பினர் எண்ணிக்கையை கண்டுபிடிப்பது என்ற கலக்கத்தில் கேப்டன் இருப்பதாக அங்கு சுற்றிவந்த ஒரு ஆந்தை கூறியது.

இந்நிலையில், பிரேமலதா உத்திரவின்படி, இன்டர்போல் அல்லது ஸ்காட்லாந்து யார்டு போலீஸ் உதவியை நாட கேப்டன் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக பாதுகாப்பு துறை அமைச்சகத்துடன் கேப்டனுக்கு நெருக்கமான ஒரு டெல்லி பிரமுகர் பேசி வருவதாகவும், உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இதற்கு பச்சை கொடி காட்டி விட்டதாகவம் இதன்மூலம், எவ்வளவு பேர் கட்சியில் இருக்கின்றனர் என்ற உண்மையை, அவர் கண்டறிய உள்ளதாக, கட்சி வட்டாரம் தெரிவித்தது.

இது குறித்து கருத்து தெரிவித்த ஒரு கேப்டனின் நெருங்கிய நண்பர் கூறும்போது கேப்டன் கட்சியில் அவரது குடும்பமும், மச்சான் சுதீஷின் குடும்பமும் மட்டுமே உள்ளது, இதைக் கணக்கெடுக்க கேப்டன் ஏன் இன்டர்போல் உதவியை நாடுகிறார் என்று புரியவில்லை என்று நமுட்டு சிரிப்பு சிரித்தார்.

There are no comments yet