டெல்லி: ரூபாய் நோட்டு ஒழிப்பு குறித்து அறிவித்தபோது பிரதமர் மோடி, 50 நாட்களில் இயல்பு நிலை திரும்பும், அதுவரை காத்திருங்கள் என்றும் கூறியிருந்தார். தற்போது அந்த 50 நாள் கெடு முடியப் போகிறது. ஆனால் இதுவரை நிலைமை சரியாகவில்லை. மக்கள் தொடர்ந்து அவதிக்குள்ளாகியே வருகின்றனர். இந்த நிலையில் இத்தனை நாட்களாக மெத்தனமாக இருந்து விட்டு தற்போது புதிய 500 ரூபாய் நோட்டுக்கள் அச்சிடும் பணியை விரைவுபடுத்தியுள்ளதாம் ரிசர்வ் வங்கி. 500, 1000 ரூபாய் நோட்டுக்களை ஒழித்த மத்திய அரசு புதிதாக 2000 ரூபாய் நோட்டை வெளியிட்டது. ஆனால் இதனால் மக்களுக்கு அவதிகளே கூடியதே தவிர நிவாரணம் கிடைக்கவில்லை. காரணம், பெருமளவில் சில்லறைப் பிரச்சினையும், 100 ரூபாய்க்குத் தட்டுப்பாடும் ஏற்பட்டதே. புதிய 2000 ரூபாய் நோட்டு மக்களுக்கு எந்த பலனையும் தரவில்லை. மாறாக, தேவையில்லாத தலைவலியாகவே இருந்தது

இந்நிலையில் மும்பையின், ரெய்காட்டில், பங்கு சந்தைக்கான புதிய கட்டடத்தை திறந்து வைத்து பிரதமர் மோடி பேசியதாவது: எனது மதிப்பை போல் சர்வதேச பொருளாதார வளர்ச்சி குறைந்து வருகிறது. கடந்த 3 வருடங்களில் மல்லையாவையே லண்டனுக்கு அனுப்பியும், அதானிக்கு வராது என்றும் தெரிந்தும் கடன் கொடுத்ததன் மூலமும் பொருளாதாரத்தை அரசு மேம்படுத்தியுள்ளது. நடுத்தர மக்களிடம் பணமே இல்லாமல் செய்து பணப்பற்றாக்குறை குறைக்கப்பட்டுள்ளது. ஏடிஎம்களில் மக்கள் கால் கடுக்க நின்றும் கால் வீக்கம் உள்ளதே தவிர , மக்களிடம் பணவீக்கம் குறைவாக உள்ளது.

அரசு துடிப்பான பொருளாதார கொள்கைகளை எடுக்கும், குறுகிய கால அரசியல் லாபத்திற்காக எந்த முடிவும் எடுக்க மாட்டோம். நாட்டு நலனுக்காக, தேவைப்பட்டால் நான் ராஜினாமா செய்து பழைய டீ கடை வேலைக்கு போகும் கடினமாக முடிவை எடுக்க தயங்க மாட்டேன். என்று ஆவேசமாக கூறினார்,

பகிர்

There are no comments yet