சென்னை: வரும் 29-ம் தேதி காலையில் நடைபெறும் செயற்குழுக் கூட்டத்தில், உடன் பிறவா சகோதரி சசிகலா அதிமுக பொதுச் செயலாளராகப் பொறுப்பேற்க வேண்டும் என்ற வேண்டுகோள், தீர்மானமாக வைக்கப்படும். அதன்பிறகு பொதுக்குழு கூடும். செயற்குழுவில் நிறைவேற்றப்படும் தீர்மானத்துக்கு அதில் ஒப்புதல் அளிக்கப்படும். அன்றே, சசிகலா அவர்கள் கட்சியின் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று தெரிகிறது.

இந்நிலையில் சசிகலா அதிமுக பொதுச் செயலாளராக ஆனால் பிரளயமே வெடித்து விடும் என்றும், அதிமுக அழிந்து மண்ணோடு மண்ணாகி விடும் எனவே, ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா அதிமுகவை வழிநடத்த வேண்டும் என்றும், முதல்வர் பன்னீர்செல்வத்திற்கும், சசிகலாவுக்கும் சிண்டு முடியும் வேலையை செவ்வனே செய்தும் தினமலர், ஹிந்து போன்ற ‘அவாள்’ பத்திரிகைகள் செய்வதாக நமது கப்ஸா நிருபருக்கு வந்த தகவலை அடுத்து சம்பத்தப்பட்ட பத்திரிகை முதலாளிகளை சந்திக்க விரைந்தார்.

தினமலர் முதலாளி, பாஜகவுடன் பேரத்தில் பிசியாக இருந்ததால், அவரது அலுவலகத்தில், உங்கள் நியூஸ் கப்ஸா நிருபரை போன்று அலுவலகத்தில் விட்டத்தை பார்த்து அரசியல் புலனாய்வு கட்டுரை நிருபரை சந்தித்தபோது அவர் என்னை விட எங்க ஆபீஸ் செக்யூரிட்டிக்கு நிறைய அரசியல் தெரியும், அவரை கேளுங்கள் என்று கூறினார். முறுக்கு மீசை செக்யூரிட்டி நம்மிடம் கூறியதாவது : ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தமிழக பார்ப்பனர்களுக்கு ஒருவித அரசியல் நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. ஜெயலலிதா என்னும் பிம்பத்தின் இருப்பே (presence) பார்ப்பனர்களுக்கு தமிழகத்தில் ஒரு பாதுகாப்பு உணர்வை தந்துவந்தது. ஜெயலலிதாவுக்கு முன்பு எம்ஜிஆரின் இருப்பு மூலம் அவர்களுக்கு அந்த பாதுகாப்பு உணர்வு இருந்துவந்தது. இப்போது, ஜெயலலிதாவின் மறைவால் அவர்களுக்கு இங்கே பாதுகாப்பு உணர்வு (Secured feeling) இல்லை. தங்கள் பாதுகாப்பு உணர்வை, அரசியலை மீட்டுருவாக்க பார்ப்பனர்கள் குட்டிக்கரணம் போட்டுக்கொண்டிருக்கிறார்கள். தீபாவை அவர்கள் தூக்கிக்கொண்டு வருவது இதன் அடிப்படையில்தான்! ஜெயலலிதாவின் அரசியல் வெற்றியும் அவரது பிம்பமும் தவிர்க்க முடியாததாகிப் போனபின்பு, அடித்தட்டு மக்களால் உருவாக்கப்பட்ட ஜெயலலிதாவை பார்ப்பனர்கள் கொஞ்சம்கொஞ்சமாக கபளீகரம் செய்யத் தொடங்கினர். அதில் முடிந்த அளவு வெற்றியும் கண்டனர்.

ஆட்சியின் பிற்காலத்தில், பார்ப்பனர்கள் தங்களுக்கு தேவையான அனைத்தையும் ஜெயலலிதாவின் மூலம் நிறைவேற்றிக்கொள்ள அவர் உறுதுணையாக இருந்தார். அர்ச்சகர் சட்டம், சிதம்பரம் கோயில் உள்ளிட்ட இன்னபிற விஷயங்களை சொல்லலாம்! இறுதியில் சோ ராமசாமியே ஜெவின் ஆஸ்தான ஆலோசகராகவே ஆனார். இந்நிலையில் பார்ப்பனர்களின் நம்பிக்கையை ஜெயலலிதா பெற்றாலும், சசிகலா மீது அவர்களுக்கு ஒருவித ஒவ்வாமை இருந்திருக்கிறது. அதிமுகவுக்குள்ளேயே ஜெயலலிதா ஆதரவுக்குழுவில் பூணூல் மேனிகள் இருந்தன. ஆனால், சசிகலா ஆதரவுத்தரப்பில் முறுக்கு மீசைகளே இருந்தன. ஆனால், இவர்களுக்குள் ஒருவித நிலைபெறாத சமரசம் மேலோட்டமாகவே நிலவியது.

ஜெயலலிதாவின் இமேஜை பார்ப்பனர்கள் திட்டமிட்டு பாதுகாத்து உயர்த்திவந்த சமயத்தில், சசிகலாவின் இமேஜை பார்ப்பனக்கூட்டம் (சோ உட்பட) டேமேஜ் செய்யத் தொடங்கியது. சசிகலா மீதான மன்னார்குடி மாஃபியா பட்டம் புகழ்பெற்ற அளவுக்கு ஜெயலலிதா மீதான ஊழல்ராணி பட்டம் புகழ்பெறவில்லை. இருவரும் அதிமுக குட்டைக்குள் இருந்தாலும் ஜெயலலிதா மட்டும் நேர்மையானவர் ஆனால் சசிகலா மோசமானவர் என்று பார்ப்பனர்கள் பொதுவெளியில் உருவாக்கிய கருத்து அந்தக் கட்சிக்குள் நடந்த ஆரியர்-திராவிடர் முரண்பாட்டின் ஒரு மெல்லிய இழை!

இப்போது, அதிமுகவின் மிகப்பெரும்பகுதி பொறுப்பாளர்கள் சசிகலாவின் தலைமையை ஏற்கத் தயார். ஆனால், பார்ப்பனர்களுக்கு சசிகலாவோடு ஒவ்வாமை இருக்கிறது. பார்ப்பனர்-பார்ப்பனரல்லாதார் பிரச்சினை பற்றியெல்லாம் சசிகலாவுக்கு இதுவரை போதிய அளவு தெரிவதற்கு வாய்ப்பில்லாமல் போயிருந்தாலும், இனி கண்டிப்பாக அவருக்கு தெரியவரும்! தீபாவை முன்னிலைப்படுத்தும் பார்ப்பனர்கள் அதன் மூலம் என்ன செய்ய விரும்புகிறார்கள் என்பதில்தான் அவர்களின் முயற்சிக்கான விடை அடங்கியிருக்கிறது. தீபாவை அவர்களால் இங்கே ஒரு தலைவராக உருவாக்கி நிலைநிறுத்த முடியாது. அது கஷ்டம் என்பது அவர்களுக்கே தெரியும்.

அவர்களின் நோக்கம், தீபா மூலம் தங்களின் bargaining powerஐ அதிகரித்துக் கொள்ள வேண்டும். அந்த powerஐ கொண்டு சசிகலாவோடு negotiate செய்துகொள்ள முயற்சிப்பார்கள். அதன் மூலம், பார்ப்பனர்கள் தங்களுக்கான பாதுகாப்பை, தங்கள் அரசியலை தமிழகத்தில் உறுதிசெய்துகொள்ள பார்ப்பார்கள். தமிழகம் முழுவதும் ஒட்டப்படும் தீபா ஆதரவு போஸ்டர்களை பார்ப்பனக் கைக்கூலி முகமூடிகள் தான் ஒட்டிவருகின்றனர் என்று சந்தேகிக்கலாம். இது பார்ப்பனர்களின் பேரம்பேசும் வலிமையை அதிகரிக்கும் என்று அவர்கள் நம்புகிறார்கள்!

அதிமுகவில் சசிகலாவுக்கு மாற்றாக, கட்சியில் இருக்கும் முக்கியஸ்தர்களை முன்னிறுத்தாமல், எங்கேயோ உள்ள ஜெயாவின் அண்ணன் மகள் தீபாவை “குறிப்பிட்ட சிலர்” முன்னிறுத்துகிறார்கள். சசிகலாவுகாவது அரசியல் கட்சியின் அனுபவம் உள்ளது. முப்பதாண்டுகள் ஜெயாவுடன் நெருங்கிய உறவு இருந்தது. ஆனால், தீபாவுக்கு எந்த அரசியல் முன் அனுபவம் இருக்கிறது? எத்தனையாண்டுகாலம் அவர் அதிமுகவில் உறுப்பினராக இருக்கிறார்?

சசிகலா & உறவினர்களை கடந்த 2011 டிசம்பரில் போயஸ்கார்டன் வீட்டை விட்டு வெளியேற்றிய பின்னர், ஏறக்குறைய நூறு நாட்களுக்கு மேலாக, அவர்களை பிரிந்துதானே ஜெயலலிதா தனியாக இருந்தார். அப்போதுகூட, இந்த தீபா முதலான சொந்தங்களை ஜெயலலிதா பார்க்கவோ, சந்திக்கவோ, சேர்த்துகொள்ளவோ இல்லையே. ஜெயலலிதாவுக்கு விருப்பம் இருந்திருந்தால், அதை யாரும் தடுத்திருக்கமுடியாதே. அப்படியானால், தனது அண்ணன் குடும்பத்தை சார்ந்தவர்களை முன்னிறுத்தவோ, சேர்த்துகொள்ளவோ ஜெயாவுக்கு துளியும் விருப்பம் இல்லை என்பது உண்மைத்தானே. தனது அண்ணன் குடும்பத்தினர் மீதும் ஜெயலலிதாவுக்கு பாசம் இல்லை, இருந்திருந்தால், இருபத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாக, அவர்களை அருகில் அண்டவிடாமல் இருந்திருக்கமாட்டார்.. அவர்களின் நல்லது கெட்டதுகளிலும் ஜெயலலிதா பங்கெடுத்தது இல்லை. போயஸ் வீட்டில் தான் சிலர் தடுக்கிறார்கள் என்றால், தலைமை செயலகதுக்கு தனியாகத்தானே பல ஆண்டுகளாக ஜெயலலிதா வந்து சென்றார்? அங்கே அவர்களை சந்திக்க ஜெயலலிதா விருப்பப்பட்டிருந்தால், யாராகிலும் தடுத்திருக்க முடியுமா? முன்பின் தெரியாத, ஜெயலலிதாவுடன் இருபது ஆண்டுகளுக்கு மேலாக எந்த தொடர்பிலும் இல்லாத, அவரால் ஒதுக்கிவைக்கப்பட்ட, அதிமுகவுடன் கிஞ்சிதுக்கும் ஒட்டுறவு இல்லாத, ஒரு தனிநபரை, “அவர் ஜெயலலிதா போன்ற உருவத்தில் உள்ளார், அவரது குரலை போல உள்ளது, அவருடைய ரத்தம், அவர் அரசியலுக்கு வருவாரா?” இப்படி தூபம் போடுவதுதான், அவர்கள் பாரம்பரியமாக காலம் காலமாக கடைப்பிடிக்கும் “காட்டியும் கொடுப்பது. கூட்டியும் கொடுப்பது” என்ற கொள்கையாகும். இதற்கு, தமிழக அரசியலில் தங்கள் இனத்தை சார்ந்தவர் முக்கியமான இடத்தில் இருக்கவேண்டும் என்ற அவாள்களின் ஆசைதான் ஒரே காரணம்.

அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா இறந்ததிலேயே இவ்வளவு சந்தேகங்களை எழுப்பியும், உடனிருந்த சசிகலா மீது ஏகப்பட்ட பழிகளையும் சுமத்துகிறர்களே, ஒருவேளை, போயஸ்கார்டன் வீட்டிலேயே ஜெயலலிதா இறந்திருந்தால், இன்னும் எப்படியெல்லாம் சசிகலாவின் மீது பழிகளை போட்டிருப்பார்கள்? நான் சசிகலாவை ஆதரிக்கவில்லை, இருந்தாலும் வீண் அபாண்டங்களை, அவர் மீது திணிப்பது நியாயம் அல்ல. உண்மையில் சசிகலாவை ஜெயலலிதாவுக்கு பிடிக்காது, அவர் மீது ஏதோ ஒருவகையில் சந்தேகம் இருந்திருந்தால், கட்டாயம் ஜெயலலிதா அதை வெளிப்படுதியிருப்பார்.

அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெறும் படத்தை வெளியிடுங்கள் என பலரும் கேட்டோம், அப்படி வெளியிட்டு, ஒருவேளை ஜெயலலிதா குணமாகி வந்து, ஏன் அப்படி செய்தீர்கள் என கேட்டு உடனிருந்தவர்களை எப்படி நடத்தியிருப்பார் என தெரியாது. அப்படி நடந்திருந்தால் ஜெயாவின் ரியாக்க்ஷன் எப்படி இருக்கும் என பயந்திருக்கலாம்.. ஏனென்றால், ஜெயலலிதாவின் குணம் அப்படியானது.. சிகிச்சை பெற்ற தினத்தந்தி சிவந்தி ஆதித்தனாரை பார்க்க ICUனுள் ஜெயா செல்லும்போது, செருப்பு மேல் கால் உறையை அணிந்துகொண்டு ICUனுள் செல்லுங்கள் என சொன்ன ஒரு வயது மிகுந்த சீனியர் மருத்துவரை, அன்றிரவே பொய் வழக்கில் கைது செய்து புழல் சிறையில் அடைத்து மகிழ்ந்தவர் தான் ஜெயலலிதா என்பதை நினைவில் கொள்ளுங்கள். சசிகலாவை விமர்சிக்க, எதிர்க்க பல காரணங்கள் உள்ளன, ஆனால், ஜெயலலிதாவின் மரணத்தில் முடிச்சிபோட்டு வீண் பழிபோடுவது அபாண்டமானது.

செக்யூரிட்டியின் நீண்ட அரசியல் பிரசங்கத்தை கேட்ட கப்ஸா நிருபர், நீங்க உள்ள இருக்க வேண்டியவர் வெளிய இருக்கீங்களே என்று கேட்டபோது, நான் ‘அவாள்’ இல்லியே சார் என்ன செய்றது, அதோட நான் உள்ளே போனா அவங்க சொல்றதுதான் எழுதணும் அது என்னால் முடியாது என்று அங்கலாய்த்தார்.

There are no comments yet