சென்னை: இயேசுபிரான் பிறந்தநாளான கிறிஸ்துமஸ் பண்டிகை நாளை உலகம் முழுவதும் கிறிஸ்துவ மக்களால் கொண்டாடப்படுகிறது. கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் வழக்கமான உற்சாகத்துடன் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட்டது. பிறகு நமது கப்ஸா நிருபருடன் உரையாடிய கேப்டன் கூறியதாவது: சாதி, மத, பேதமற்ற சமதர்ம சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்றும், எல்லா மதமும் நம் மதமே என்ற பரந்த சிந்தனையோடு, அனைத்து மதத்தினரின் விழாக்களையும் நாம் வருடந்தோறும் கொண்டாடி வருகிறோம்.

சமீபத்தில் மும்பையில் சிவாஜி நினைவு சின்னம் ரூ.3 ஆயிரத்து 600 கோடி செலவில் அமைக்கப்படும் என்றும் இந்த சிலை, 192 மீட்டர் உயரத்துடன்(629 அடி), உலகிலேயே மிக உயரமான சிலை என்ற அந்தஸ்தை பெறுகிறது. அதாவது, அமெரிக்காவில் உள்ள சுதந்திர தேவி சிலையை காட்டிலும், அதிக உயரத்தில் சிலை தயாராகும் என்று அறிந்தேன். இதற்கான அடிக்கல் நாட்டு விழா பிரதமர் மோடி தலைமயில் நடைபெற்றது என்றும் பத்திரிகைகளில் படித்தேன். இவ்வளவு செலவு செய்து மும்பையில் சிவாஜிக்கு சிலை வைக்கும்போது, தமிழ்நாட்டில் அதுவும் சென்னையில் சிவாஜி சிலையை அகற்றச் கூறி சிலர் கூக்குரவிடுவது ஏன் என்று எனக்கு புரியவில்லை என்று வருத்தப்பட்டார்.

பகிர்

There are no comments yet