சென்னை: தற்போது சமூக வலைதளங்களில் நடிகர் ஷாம் அதிமுகவிற்கு ஆதரவாக அதுவும் சின்னம்மாவுக்கு முட்டுக் சென்னை: கொடுத்து பேசும் ஒரு வீடியோ பரப்பப்பட்டு வருகிறது. அதில் ஷாம் கூறுவதாவது: “மக்களால் நான், மக்களுக்காகவே நான் இது தான் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தாரக மந்திரம். அதற்கு முன்னுதாரணமாக திகழ்ந்தவர் ஜெயலலிதா, தனக்கென வாழாமல், குடும்பம் வாரிசு இல்லாமல், அனைவருக்கும் அம்மாவாக வாழ்ந்தவர். அவரது புகழை கெடுக்கும் வகையில் சமூக வலைதளங்களில் தவறான கருத்துக்களும், அவரது மறைவுக்கு சிலர் காரணம் என்று ஆதாரமில்லாத, பயனற்ற செய்திகளும் பரப்பபட்டு வருகிறது.. இதனால் யாருக்கு என்ன லாபம் என்று தெரியவில்லை. தமிழக மக்களுக்கு தன் வாழ்வை அர்ப்பணித்த அம்மாவுக்கு நாம் மரியாதை தரவேண்டும், தயவு செய்து நல்ல விஷயங்களை பேசி, நல்ல விஷயங்களில் கவனம் செலுத்துவோமே..” என்று கூறுகிறார்.

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, அதிமுக பேச்சாளரும், நடிகருமான செந்தில், அதிமுக விற்கு தொடர்ந்து ஆதரவு அளிப்பதாகவும், சின்னம்மா தான் பொதுச்செயலாளர் ஆக வேண்டும் என்றும் தெரிவித்தார். ஆனால் அதிமுக வின் மற்றொரு நட்சத்திர பேச்சாளாரன ஆனந்தராஜ் சின்னம்மாவிற்கு எதிராக கருத்துக்களை கூறி கட்சியில் இருந்து வெளியேறினார். முன்னாள் அதிமுக எம்.பி.யான நடிகர் ராமராஜன் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தீவிர ரசிகர், ஆதரவாளர். நேரம் கிடைக்கும் போது எல்லாம் அம்மா புகழ்பாடுபவர். சசிகலா கட்சி தலைவியாக பொறுப்பேற்க ராமராஜனும் ஆதரவு தெரிவித்துள்ளார். இப்படி சின்னம்மாவுக்கு அதிமுக சார்ந்த நடிகர்கள் மத்தியில் ஆதரவும் எதிர்ப்பும் கலந்து கட்டி அடித்துக் கொண்டிருக்க, சமூக வலைத்தளங்களால் தனது பொதுச்செயலாளர் கனவிற்கு பங்கம் வந்துவிடக்கூடாது என்பதற்காக அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளார். ஜெயலலிதா அப்பல்லோவில் சிகிச்சை பெறும்போதே இரண்டு மூன்று பேரை கைது செய்து அவதூறு சாயம் பூசினார். ‘அதிமுக ஐ.டி. விங்’ என்ற வாட்டர்மார்க்குடன் வீடியோ வெளியாகி உள்ளதால், இது சொல்லிக் கொடுத்து பேசிய வீடியோ என்பது தெளிவாகிறது.

ஷாமின் திடீர் பேட்டியை ட்விட்டரில் பார்த்த நமது கப்ஸா நிருபர், ஒரு புரொடக்ஷன் மேனேஜர் உதவியுடன் ஷாமின் தொலைந்து போன அட்ரசை கண்டுபிடித்து அவரிடம் எடுத்த பேட்டியில் ஷாம் கூறியதாவது: ஆரம்ப காலத்தில் சாக்லெட் பாயாக வலம் வந்த இந்த ஷாம் தற்போது படங்கள் இல்லாமல் வீட்டில் முடங்கிக் கிடந்தேன். அப்போது தான் ‘MOM’ (அம்மா) பற்றி சின்னம்மா எடுக்கும் விளம்பரப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு ஒரு அசிஸ்டண்ட் டைரக்டர் மூலம் வந்தது. கதாநாயகன் ரோலில் நடித்த எனக்கு தற்போது காருக்கு பெட்ரோல் போடக் கூட காசில்லாததால், 12B பஸ்சை பிடித்து வந்து சின்னம்மா ‘பிராக்சி’ யில் சொல்லச் சொல்ல டயலாக்கை எனக்கு தெரிந்த டமிழில் ஒப்பித்து நடித்துக் கொடுத்தேன்..” என்றார்.

பகிர்

There are no comments yet