சென்னை: பல்கேரியாவில் நடைபெற்று வரும் அஜித்-சிறுத்தை சிவா கூட்டணியில் உருவாகும் ‘தல-57’ என்ற பெயரிடப்படாத படத்தின் படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. புத்தாண்டு கொண்டாட அஜித் விரும்பியதால் டிச.27 அன்று சென்னை திரும்பினார். இந்நிலையில் சின்னம்மாவை அஜித் சந்திததாக ஒரு செய்து உலாவரத் தொடங்கியுள்ளது. இந்த சந்திப்பை, அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவின் மாநில இணை செயலாளர் ஒரு டிவிட்டில் உறுதி செய்தார். பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் ஒதுங்கி இருப்பவர் அஜித், பல்கேரியாவில் படப்பிடிப்பில் இருந்த நிலையில், ஜெயா மறைவிற்கு சென்னை வந்து அஞ்சலி செலுத்தி திரும்பிச்சென்றார்.அதிமுக பொதுக்குழு-செயற்குழு கூட்டம் வரும் 29ம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. அதில் சசிகலாவை அதிமுக பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்க வாய்ப்புள்ளது. இதனிடையே சசிகலாவுக்கு ஆங்காங்கு எதிர்ப்புகள் நிலவுவதையும் அதிமுக கவனித்து வருகிறது. எனவே அஜித் போன்ற ஒரு பிரபலத்தின் ஆதரவு சசிகலாவுக்கு இருப்பதை போன்ற தோற்றத்தை ஏற்படுத்த அதிமுக தகவல் தொடர்பு பிரிவில் சிலர் செய்த மாய்மாலம்தான் இந்த வதந்தி என சில ஊடகங்கள் தகவல் கூறுகின்றன.

இது குறித்து நமது கப்ஸா நிருபரிடம் அதிகப்பிரசங்கி அதிமுக நிர்வாகி அளித்த தகவல்கள்: அதிமுகவை தோற்றுவித்த எம்.ஜி.ஆர் ஒரு நடிகர், அம்மா ஜெயலலிதா ஒரு நடிகை. ஆனால் தற்போது அதிமுகவில் சின்னம்மா வலுவான நிஜ வாழ்க்கை நடிகையாக உள்ளது போல ஒரு சினிமா ‘நடிப்பு’ பிரபலம் இல்லை. அந்த குறையை போக்கவே அம்மா அப்பல்லோவில் இருந்தபோது கற்றுக் கொண்ட ‘டெலிபதி’ முறையில், சின்னம்மா அஜித்துடன் உரையாடினார். இதையடுத்து சின்னம்மா கேட்டுக்கொண்டதற்காக தனது ‘டூப்பை’ அனுப்பி சின்னம்மாவுடன் ஒரு சந்திக்க செய்தார். ரெட்டி முதல், ராம்மோகன் ராவ் வரை தமிழ் நாடே பரபரப்பாக இருக்கிறது. நாளை பொதுக்குழு கூடும் போது இன்னும் பரபரப்பு கூடும். எனவே அஜித்தை எப்படியாவது கட்சிக்குள் இழுத்து வந்து தீபாவுக்கு ஒரு டஃப் பைட் கொடுக்கலாம் என்று நினைக்கிறோம். அதனால் தான் மக்கள் மன நிலையை அறிய இந்த மாதிரி வதந்தி பரப்பினோம் என்று உண்மையை போட்டுடைத்தார்.

பகிர்

There are no comments yet