சென்னை: இன்று அதிமுக பொதுக்குழு கூட்டப்பட்டு சின்னம்மா பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கபட உள்ளதாக செய்திகள் உலா வருகின்றன. இந்நிலையில் அதிமுகவின் முதல் அதிருப்தியாளராக நடிகர் ஆனந்தராஜ் அம்மா இல்லாத அதிமுகவை நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை, செங்கோட்டையன், பொன்னையன் போன்றவர்களது பேச்சு வருத்தம் அளிப்பதாகவும், தனக்கு பொதுக் குழுவிற்கு அழைப்பு விடுக்கப்படவில்லை எனறும், ஒருவரை (சின்னம்மா) உயர்த்திப் பேசி, அம்மாவை இழிவு படுத்துவது வருத்தமளிப்பதாகவும், மறுபக்கம் தீபா பொதுச்செயலாளர் ஆக வெண்டும் என்று ஒரு கூட்டம் போஸ்டர் பேனர் என்று அழிச்சாட்டியம் செய்து கொண்டு இருப்பது பிடிக்கவில்லை, 12 வருடமாக (ஒரு மாமாங்கம்) இருந்த அதிமுகவை விட்டு விலகுகிறேன், வாய்ப்பு கிடைத்தால் திமுக தலைவர் கருணாநிதியை சந்திப்பேன் என்றும் தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா ஏதேனும் உயில் எழுதி வைத்துள்ளாரா? அவரது சொத்துக்கள் சட்டப்படி யாருக்கு சேர வேண்டும்? என்ற கேள்விக்கு பதில் அளித்த போது நடிகர் ஆனந்தராஜ், உயில் பற்றி எனக்கு தெரியாது. நான் தெரிவித்த கருத்துக்கு, நிறைய வரவேற்பு கிடைத்தது. குடும்பம் என்றால் பிரச்சினை வரும். எது எப்படி இருந்தாலும், ஜெயலலிதா வாழ்ந்த இல்லத்தை, கோவிலாக மாற்ற வேண்டும். இதற்காக, யார் காலில் வேண்டுமானாலும், விழத்தயாராக உள்ளேன் என தெரிவித்தார். மேலும் நினைவு இல்லமாக இல்லாமல், சிலைவைத்து, மூன்று வேளை பூஜையும் நடத்தக் கூடிய கோவிலாக, தியானம் செய்யும் இடமாக மாற்ற வேண்டும். ஏனென்றால் பெண்கள் மனதார ஜெயலலிதாவை மதிக்கின்றனர் என கூறினார்.

கொடூரமான வில்லனாக கேப்டன் விஜயகாந்த்தால் வளர்க்கப்பட்டு திரைத்துறையில் வெற்றிகரமாக வலம் வந்து, வயது முதிர்வாலும், புதியவர்களின் வரவாலும், நிஜ ரௌடியாக வலம் வந்தவர் மார்க்கெட் போய் ‘நானும் ரௌடிதான்’ படத்தில் நகைச்சுவை வில்லனாக நடித்தார். நகைச்சுவையாகவே நமது கப்ஸா நிருபரிடமும் பேசினார்: அதிமுகவில் அம்மாவின் அரவணைப்பில் இருந்ததால் நான் வில்லத்தனத்தை விடுத்து ‘நல்ல புள்ளையாக’ இருந்தேன். அம்மாவின் மறைவிற்கு பிறகு ‘சித்தி’ கொடுமை ஆரம்பித்து விட்டது. பத்தாததற்கு என் மாமா மகள் தீபா வேறு பதவிக்கு ஆசைப்படுகிறாள். 12 வருடமாக எனக்குள் தூங்கிக் கொண்டிருந்த ‘ஆந்தையை’ சித்தி உசுப்பி விட்டதால், நண்பர் கேப்டன் விஜயகாந்த்தை சந்திக்கப் போகலாம் என்று தான் நினைத்தேன். அவரே நொந்து போயிருக்கிறார், அதனால் வர்தா புயலுக்கு கூட சாயாத வைரம் பாய்ந்த மரமாக காவேரி மருத்துவமனையில் இருந்து திரும்பி ஓய்வுக்கு ஓய்வு கொடுத்துக் கொண்டிருக்கும் ஊழல் தாத்தா கருணாநிதியை சந்தித்து, அடுத்த மாமாங்கத்துக்கு திமுக வில் எனது அரசியல் மறுபிரவேசத்தை ஆரம்பிக்க இருக்கிறேன் .

பகிர்

There are no comments yet