சென்னை: விஷால் நடிப்பில் ‘கத்தி சண்டை’ படத்தை இயக்கி தோல்வி அடைந்ததால், நயன்தாரா, தமன்னா போன்ற நடிகைகளுடன் ‘கத்தி’ சண்டை போட்டுக்கொண்டு இருக்கிறார் இயக்குனர் சுராஜ். ‘கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் நடிகைகள் கடைக்கோடி ரசிகனை திருப்திப் படுத்த கம்மியான ஆடையில் கவர்ச்சியாக நடிக்கத்தான் வேண்டும், நடிப்புத்திறமையை காட்ட வேண்டும் என்றால் டிவி சீரியலில் நடிக்க வேண்டியது தான். என்று பேட்டி அளித்திருந்தார்.

மேலும், ஆடை அலங்காரக் கலைஞர் கதாநாயகியின் ஆடை, முழங்காலுக்குக் கீழ் இருக்கும்படி கொண்டுவந்தால் அதைக் குறைக்கும்படி கூறுவதுண்டு என்றும், “மேடம் கோபப்படுவார்” என்று அவர் திரும்பத் திரும்பக் கூறினாலும், நான் சொன்னபடி செய்ய வைப்பேன்,” என்று பேட்டியில் குறிப்பிட்டிருந்தார். “நடிகைகள், கவர்ச்சியாக உடை அணிந்தால்தான், படம் பார்க்கும் ரசிகர்கள் மகிழ்ச்சியடைவார்கள். அதனால், எனது படங்களில் நடிகைகளின் ஆடை கவர்ச்சியாக இருப்பதை உறுதி செய்வேன்” என்றும் தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. லோபட்ஜெட் படத்துக்கு லோஹிப் தான் பெஸ்ட், காஸ்டியூம் செலவும் கம்மி என்று கூறாததாகவும் நம்பப்படுகிறது.

இதற்கு நடிகைகள் நயன்தாரா மற்றும் தமன்னா இருவரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் சுராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில் “நான் கூறிய கருத்துக்களை வாபஸ் வாங்கிக் கொள்கிறேன்” என மன்னிப்பு கோரியுள்ளார். இதை கேள்விப்பட்டு நமது கப்ஸா நிருபரை தனது ஐபோனில் அழைத்து கொடுத்த பேட்டியில் நயந்தாரா கூறியதாவது: அறிமுகமான ஐயா படத்தில் பள்ளி மாணவியாக ஸ்கூல் யூனிஃபார்ம் போட்டு தான் நடித்தேன். பின்னர் சில காலம் படவாய்ப்பு இல்லாமல் விஜய் மாற்றும் ரஜினி படங்களில் ஐட்டம் சாங்குக்கு நடனம் ஆடினேன். பலத்த யோசனைக்குப்பின் கலை சேவை செய்ய எண்ணி தல அஜித்தின் ‘பில்லா’ படத்தில் ஒரு கோடி சம்பளம் வாங்கி ‘டூ பீஸ்’ கலாசாரத்தை துவங்கி வைத்தேன். அவார்டு படங்களில் நடித்தால் அரிசி வாங்க கூட காசிருக்காது, வியாபார ரீதியிலான படங்கள் தான் என்னைப் போன்ற நடிகைகளுக்கு தங்கச் சுரங்கம் போன்றவை, அது போன்ற படங்களை எடுக்கும் சுராஜ் போன்ற இயக்குனர்கள் தான் எங்களுக்கு ‘நண்பர்கள்’, சுராஜ் அவசரப்பட்டு மன்னிப்பு கேட்டு இருக்க வேண்டாம், காஸ்டியூம் செலவை குறைக்க வேண்டுமானால் எங்களிடம் சொல்ல வேண்டியது தானே, ‘கதைக்கு தேவை சதை’ என்ற பதம் இருக்கும் வரை கர்ச்சீப் கூட கட்டாமல் நடிக்க தயங்க மாட்டோம், பணம் தான் பிரதானம்” என்று கவர்ச்சியாக பாரதிராஜா படங்களில் வருவது போல வானத்தைப் பார்த்து சிரித்தார்.

பகிர்

There are no comments yet