சென்னை: ராயப்பேட்டை அதிமுக அலுவலகத்தில் பொதுச்செயலாளர் பதவிக்கு விண்ணப்பம் வாங்க வந்த சசிகலா புஷ்பாவின் கணவரை அம்மாவின் அடிமைகளும், சின்னம்மவின் அன்பிற்கு கட்டுப்பட்ட அதிமுக தொண்டர்களும் லேசாக தட்டினார். ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அதிமுகவை வழிநடத்தப் போகும் ஆளுமை யார் என்ற கேள்வி எழுந்த நிலையில், அதிமுக நிர்வாகிகளால் சின்னம்மா ஒருமனதாக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளதாக் செய்திகள் உலவுகின்றன. மற்றொரு பக்கம் ஜெயாவின் அண்ணன் மகள் தீபாவிற்கும் ஒரு சாரார் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். ஜெயலலிதா மீது பார்லி.யில் பகிரங்க குற்றம் சுமத்திய சசிகலா புஷ்பா எம்.பி. யும் சளைக்காமல் நான் தான் அடுத்த பொதுச்செயலாளர் என்று களத்தில் உள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட மனு வாங்க தனது கணவரை சசிகலா புஷபா அனுப்பி வைத்ததை விரும்பாத சிலர் அவரது கணவரை சரமாரியாக அடித்து உதைத்தனர். கணவரின் உயிருக்கு ஆபத்து வந்தால் காவல்துறை தான் பொறுப்பேற்க வேண்டும் என சசிகலா புஷ்பா புகார் கடிதம் ஒன்றை தமிழக உள்துறை செயலாளர், மற்றும் காவல் துறை உயரதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளார். கடந்த ஜூலை 30 2016 அன்று திருச்சி சிவாவை டில்லி விமான நிலையத்தில் வைத்து கன்னத்தில் அறைந்து பரபரப்பை சசிகலா புஷ்பா ஏற்படுத்திஎப்போது சசிகலா புஷ்பாவின் கணவர் யார் என்ற கேள்வி ஊடகங்களில் விவாதத்துக்கு உள்ளானது. அப்போது, திருச்சி சிவாவுடன் சசிகலா புஷ்பா நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. இந்த படங்கள் மார்பிங் செய்யப்பட்டவை என திருச்சி சிவா தரப்பில் கூறப்பட்டாலும் இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
தற்போது சசிகலா புஷ்பா கணவர் தாக்கப்பட்ட செய்தி அரை குறையா காதில் விழுந்த சில நிருபர்கள் நமது கப்ஸா நிருபரையும் துணைக்கு கூட்டிக் கொண்டு திருச்சி சிவாவுக்கு “என்னாச்சோ ஏதாச்சோ..” என்று பதறியடித்துக் கொண்டு பேட்டி எடுக்க சென்றனர். அப்போது திருச்சி சிவா கூறியதாவது: “லிங்கேஸ்வரன், சிவா இரு பெயரும் ஒரே அர்த்தம் வருவதால் யாரோ எனக்கு அடி விழுந்த்ததாக கதை கட்டி விட்டார்கள். ‘என்னை’ இப்போது யாரும் அடிக்கவில்லை. சில மாதங்களுக்கு முன்பு சசிகலா புஷ்பா தான் என்னை டெல்லி ஏர்போர்டில் வைத்து அடித்தார். பிறகு அம்மாவிடம் அடியும் வாங்கினார். ஏர்போர்ட்டில் சசிகலா புஷ்பா செல்லமாக கன்னத்தில் எனக்கு ஒத்தடம் கொடுத்தார், ரத்தம் கொட்டும் அளவுக்கெல்லாம் அடிக்கவில்லை. தற்போது அடி வாங்கிய கணவர் யார் என்றே தெரியவில்லை, அவர் கரண்ட் கணவரா அல்லது வெயிட்டிங் லிஸ்டில் உள்ளவரா, ஒருவேளை சசிகலா புஷ்பா பொதுச்செயலாளர் ஆனபின் கழற்றி விடப்படுவாரா என்பதை சசிகலா புஷ்பா தான் சொல்ல வேண்டும், சசிகலா புஷ்பாவுக்கு நான் புல்-டைம் இல்லை.” என்று எரிந்து விழுந்தார்..
There are no comments yet
Or use one of these social networks