சென்னை: அதிமுகவின் உண்மையான தொண்டர்கள் அமைதி காக்க வேண்டும் என்றும் சரியான நேரத்தில் சரியான முடிவை எடுப்பேன் என்றும் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா தெரிவித்துள்ளார். அதிமுகவின் ஒரு பிரிவினர் இடையை ஜெயலலிதாவின் ரத்த உறவான தீபா தான் தலைமை ஏற்க வேண்டும் என ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு குரல்கள் எழுந்தன. தீபா கட்சிப் பொறுப்பேற்க வேண்டும் எனவும் பேனர்கள் பிளக்சுகள் தமிழகத்தின் பல மாவட்டங்களில் வைக்கப்பட்டன. சேலத்தில் தீபா பேரவையும் துவங்கப்பட்டது. இந்நிலையில் இன்று நடந்த அதிமுக பொதுக்குழுவில் சின்னம்மா சசிகலா கட்சியின் பொதுச்செயலாளராக ஜனவரியில் பதவி ஏற்பார் என தீர்மானம் நிறைவற்றப்பட்டது. இது குறித்து கப்ஸா நிருபரிடம் திடீர் தீபா அளித்த பேட்டி:

என் மீது அன்பு காட்டி பேனர்கள், கட் அவுட் வைக்க வேண்டாம் என்று சின்னம்மா செல்லமாக மிரட்டியுள்ளார். மனு தாக்கல் செய்யவந்த சசிகலா புஷ்பா கணவரை மூக்குடைத்த காட்சியை டிவியில் பார்த்து நான் பயந்து போய் விட்டேன், நானும் சின்னம்மாவிடம் சரண்டர் ஆயிட்டேன். என்னை சின்ன மகளாக தத்தெடுக்க கேட்டேன் சின்னம்மா மவுனம் காக்கிறார். அதிமுகவின் உண்மையான தொண்டர்கள் ஏமாளிகள், நான் சின்னம்மாவிடம் பேரம் படியாததால் அமைதி காக்க சொன்னதை புரிந்து கொள்ள தெரியாமல் என்னை குருட்டுத்தனமாக நம்புகிறார்கள் இல்லாவிட்டால் இத்தனை நாள் எங்கிருந்தேன் என்றே தெரியாத என்னை இரும்புப் பெண்மணியான என் அத்தையுடன் ஒப்பிட்டு போஸ்டர் அடித்து பணத்தையும் நேரத்தையும், வீணடிப்பார்களா என்று நமுட்டு சிரிப்பு சிரித்தார். அந்த சிரிப்பு அதிமுக தொண்டனில் நிலை சிரிப்பாய் சிரிக்கப் போவது தெளிவாகத் தெரிந்தது.

பகிர்

There are no comments yet