சென்னை: அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா கடந்த 5ம் தேதி காலமானார். அதைத் தொடர்ந்து முதல்வராக பன்னீர்செல்வம் பதவியேற்றுக் கொண்டார். அதிமுகவின் அதிகாரம் வாய்ந்த பொறுப்பான அக்கட்சியின் பொதுச்செயலாளர் பதவிக்கு சின்னம்மா தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்.

இதனிடையே சசிகலாவை அதிமுகவின் பொதுச் செயலாளராக தேர்தெடுக்கக்கூடாது என ராஜ்யசபா எம்பி சசிகலா புஷ்பா போர்க்கொடி தூக்கியுள்ளார். மனு தாக்கல் செய்ய வந்த சசிகலா புஷ்பாவின் கணவர் மூக்குடைந்து திரும்பினார். ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவை அதிமுகவுக்கு தலைமை ஏற்க வருமாறு அழைப்பு விடுத்து அதிமுகவினர் தமிழகம் முழுவதும் பல இடங்களில் பேனர்கள் வைத்து வருகின்றனர். தீபாதான் கட்சிக்கு தலைமை ஏற்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். அம்மாவின் மருமகளே தமிழகத்தின் திருமகளே அதிமுகவை காக்க அம்மா (எ) ஜெ. தீபாவை இருகரம் கூப்பி வரவேற்கிறோம் என்று எழுதப்பட்டுள்ளது. மேலும் எம்ஜிஆர், ஜெயலலிதா, தீபாவின் படமும் இடம் பெற்றுள்ளது. அதிமுக தொண்டர்கள் தீபா ஆதரவு பேனர் வைத்துள்ளதால் சின்னம்மா ஆதரவு நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இது குறித்து தீபா பேனருக்கு சூடம் காட்டிக் கொண்டிருந்த ஆதரவாளர் ஒருவர் தமிழ் சினிமாக்களில் வருவது போல் எரிந்து கொண்டிருந்த சூடத்தை வாயில் லபக் என்று போட்டுக் கொண்டு நமது கப்ஸா நிருபரிடம் பேட்டியளித்தார். சின்னம்மாவை ஜெயலலிதா இரண்டு முறை துரோகி பட்டம் கொடுத்து துரத்தி அடித்தார். மான ரோஷம் இல்லாத சின்னம்மா மறுபடியும் வந்து ஒட்டிக்கொண்டார். அம்மாவிடம் ஆயா வேலை பார்த்தார் சின்னம்மா. பாட்ஷா ரஜினி கூடவே இருந்ததால் ஜனகராஜ் பாட்ஷா ஆகிவிட முடியுமா? அதுமாதிரி அம்மாவுக்கு பாத்திரம் கழுவி துணிமணி துவைத்துக் கொடுத்த சின்னமா எப்படி அம்மா ஆக முடியும். அதுவும் 60+ வயசான கிழவி அம்மா ஆக முடியவே முடியாது. அம்மா ஆக இளம் வயதுடைய தீபாதான் சரியான ஆள், அம்மாவைப் போலவே உருவ ஒற்றுமையும், குரள்வளமும் முக வசீகரமுகமும் தீபாவுக்கு தான் உண்டு. சசிகலா முகம் பார்க்கவே ‘சகிக்கலா’.. அவர் ஒரு ‘சதி’கலா ஆகவே அரும்பாடு பட்டு அம்மா தூக்கி வளர்த்த அதிமுகவை தீபாவை அம்மாவாக்கி அவர் கையில் குழந்தையாக தவழ விடுவதே எங்களின் உயரிய நோக்கம். அதற்காக உயிரையும் கொடுப்போம் என்று உணர்ச்சி மேலிட சிலிர்த்துக் காட்டினார்.

பகிர்

There are no comments yet