சென்னை: அதிமுகவின் புதிய பொதுச் செயலாளராக வி.கே.சசிகலா சனிக்கிழமை (டிச.31) பொறுப்பேற்கிறார். இதற்காக, சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இது தொடர்பாக தி.மு.க. தலைவர் கருணாநிதி சசிகலாவை வாழ்த்தி இன்று உடன்பிறப்புகளுக்கு எழுதாத கடிதத்தில் கூறியுள்ளதாவது: என் எண்ணிலும், மண்ணிலும் என்றும் நீங்காமல் எனக்கு நிதி வழஙகி என்னை கருணாநிதியாக வாழவைக்கும் என் தம்பிகளுக்கு வணக்கம். நாம் இன்று தமிழகத்தில் எதிர் கட்சி, ஆனால் அதிமுக நமக்கு எதிரிக் கட்சி, அந்த கட்சிக்கு சின்னம்மா சசிகலா இன்று பொதுச் செயலாளராக பொறுப்பேற்கிறார் என்று அறிந்தேன். மட்டற்ற மகிழ்ச்சி.

இன்று எனக்கு இரட்டை சந்தோஷம். ஒன்று அதிமுகவில் ஆரிய மாயை ஒழிந்தது, ஒரு தமிழச்சி, திராவிட குலத்தோன்றல் அதிமுகவின் தலைமை பொறுப்பை ஏற்பது, மற்றோன்று இதுவரை நம்மை நடுநடுங்க வைத்த ஜெயலலிதா போல் இல்லாமல், ஒரு பணிப்பெண் இப்போது மக்கள் ‘பணி’ செய்யும் பெண்ணாக வந்து வந்துள்ளது.

உடன் பிறப்பே உனக்கு நினைவு இருக்கிறதா, இந்த சின்ன அம்மையார் சசிகலாவுக்கு, அவரது கணவர் நடராசனுக்கும் நான் தான் திருமணம் செய்து வைத்தேன். 1970-ம் ஆண்டு நடந்த இந்த திருமணத்தை தஞ்சை மாவட்ட தி.மு.க.வின் அன்றைய தளகர்த்தராக விளங்கிய, மன்னை நாராயணசாமி தலைமையில் நான் நடத்திவைத்தேன். அன்று முதல் எனக்கு உற்ற நண்பியாக இருக்கும் சின்ன அம்மையார் சசிகலா, இப்போதுதான் வாய்ப்புக் கிடைக்கப் பெற்று, அதிமுகவின் புதிய பொதுச் செயலாளராக ஒரு மனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 33 ஆண்டுகளுக்கு பிறகு எனது அருமை நண்பர், அதிமுகவின் தலைவராக இருந்த எம்.ஜி. ராமச்சந்திரனுக்கு பிறகு, தமிழர் ஒருவர் அதிமுகவின் புதிய பொதுச் செயலாளராக ஆகியுள்ளது மகிழ்ச்சிக்குரியது.

தமிழர்கள் அனைவரும், தங்கள் வாழ்வில் விடிவு காலம் ஏற்படாதா என்று நீண்ட நாட்களாக எதிர்நோக்கி யிருக்கும் வேளையில்,அதிமுகவின் புதிய பொதுச் செயலாளராக சின்ன அம்மையார் சசிகலா அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது நமக்கெல்லாம் ஓர் நம்பிக்கையைத் தருகிறது. சசிகலா அவர்கள் தமிழர்களுக்கு உரிய நீதி கிடைக்கவும், அவர்களுக்கு அதிகாரம் கிடைக்கவும் பாடுபடுவார் என முதல்வர் பன்னீர் செல்வம் கூறியிருப்பதும் மகிழ்ச்சியைத் தருகிறது. அதிமுகவின் புதிய பொதுச் செயலாளராக சின்ன அம்மையார் சசிகலா அவர்களுக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் இதயமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கருணாநிதி அந்தக் கடிதத்தில் கூறியுள்ளார்.

There are no comments yet