சென்னை: தான் கட்சிப் பதவிக்கு வர வேண்டும் என்று விரும்பியதால், ஜெயலலிதா உயிரோடு இருந்தப்போதே பதவியை கேட்டிருப்பேன் என்று ஜெயலலிதாவின் தோழி சின்னம்மா ‘பிரவோக்’ என்ற ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். இதழின் ஆசிரியராக உள்ளார் அப்சரா ரெட்டி. திருநங்கையான இவர், ஜெயலலிதாவின் தோழி சசிகலாவிடம் பேட்டி எடுக்க 4 மாதங்களுக்கு முன்பு அனுமதி கேட்டுள்ளார். ஜெயலலிதா காலமாகி 10 நாளுக்கு பிறகு பேட்டி எடுக்க சசிகலா அனுமதி கொடுத்துள்ளார். இதனையடுத்து சசிகலாவிடம் அப்சரா 45 நிமிடங்கள் பேட்டி எடுத்துள்ளார். 45 நிமிட பேட்டியின் போது சசிகலா மனம் திறந்து 33 ஆண்டு மாஸ்டர்பிளானை பற்றி பேசியதாக அப்சரா கூறியுள்ளார். அரசியல் இல்லாமல் ஜெயலலிதாவுக்கும் சசிகலாவுக்கும் இடையிலான நட்பு குறித்து மட்டுமே பேட்டி எடுக்க வேண்டும் என்ற நினைத்திருந்த தனக்கு அரசியல் சம்பந்தப்பட்ட கேள்விகளையும் கேட்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிட்டது என்று சொல்லும் அப்சரா, அதற்கும் சசிகலா அசராமல் பதில் அளித்தார் என தனது பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.
சின்னம்மாவை சந்தித்த அப்சராவை நமது கப்ஸா நிருபர் எடுத்த பேட்டியில் அப்சரா சசிகலா பற்றி மேலும் பல நினைவலைகளை நம்முடன் பகிர்ந்தார்: “நான் ஆஸ்திரேலிய பென் பிரதமர் ஜூலியா கிலார்ட், மைக்கேல் ஷூமாக்கர், அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட பிரபலங்களிடம் பேட்டி எடுத்தேன், முதன் முறையாக ஜெயா வீட்டில் ‘முறைவாசல்’ செய்த சின்னம்மாவிடம் பேட்டி எடுத்துள்ளேன். நான் ஜெயலலிதா கையால் அதிமுக உறுப்பினர் அட்டை பெற காரணமாக இருந்தவர் சின்னம்மா, ஒரு பெண்ணுக்கு தான் இன்னொரு பெண்ணின் மனது தெரியும் ஆனால் நான் ஒரு திருநங்கை என்பது தெரியாமல் எனக்கு சின்னம்மா அட்டை வாங்கி தந்தார். முப்பது வருடங்களுக்கு முன்பு ஜெயாவிடம் நட்பு கொண்டதில் இருந்து, அப்பல்லோவில் அம்மா ‘அப்பீட்டு’ ஆன கடைசி நிமிடம் வரை என்னிடம் பகிர்ந்து கொண்டார். ஏதோ ஒரு பதவிக்கு வரவேண்டும் என்பதற்காக நான் இத்தனை ஆண்டுகள் இங்கே இருக்கவில்லை. அதிமுகவை கைப்பற்றவே என் வாழ்க்கையை அம்மாவுக்கு அர்ப்பணித்தேன் என்றார். செல்வி ஜெயலலிதாவிடம் எனக்கு கிடைக்காத ‘செல்ஃபீ’ சின்னம்மாவிடம் கிடைத்தது. சின்னம்மாவை பற்றி என்னென்னவோ வதந்திகள் சமூக ஊடகங்களில் பரப்புகிறார்கள், எதுக்குமே அவர் உணர்ச்சிவசப்படவில்லை, அந்தளவுக்கு அம்மாவின் சொத்துப் பத்திரங்களை பக்குவமாக பத்திரப்படுத்தி வைத்துள்ளதால், நிர்வாகிகள் அம்மாவின் காலில் விழுந்து கிடப்பதுபோல் சின்னம்மாவில் காலில் விழுந்து கிடக்கிறார்கள்” என்று கண் சிமிட்டினார் கப்சரா, ஸாரி அப்சரா.
There are no comments yet
Or use one of these social networks