போட்டோ தாங்க்ஸ் : தி ஹிந்து

விழுப்புரம்: பா.ம.க. சிறப்பு பொதுக்குழு கூட்டம் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள தைலாபுரம் தோட்டத்தில் நேற்று காலை நடைபெற்றது. கூட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டு பேசியதாவது:– ​​2017–ம் ஆண்டை போராட்ட ஆண்டாக அறிவிக்கிறேன். நமது மரம் வெட்டி போராட்டம் நடைபெற்று நீண்ட நாட்களாகி விட்டது. கோடாரிகள் துருப்பிடித்து போய் கிடக்கின்றன. பாங்க் பாலன்ஸும் குறைந்து கொண்டே வருகிறது. எனவே முதல்கட்ட போராட்டத்தை விரைவில் அறிவிப்பேன். நமக்கு ஏற்ற எதிரிகளே டமில் நாட்டில் இல்லை. நம்முடைய கட்சியை பார்த்து தி.மு.க. உள்பட எல்லா கட்சிகளும் நமது மரம் வெட்டும் திறனைப் பார்த்து பயப்படுகின்றன.

பா.ம.க. போன்ற மட்டமான கொள்கை உள்ள கட்சி இனி எப்போதும் தோன்றப்போவது இல்லை. 2017–ம் ஆண்டில், ஒன்றியம், நகரம், மாவட்டம் முழுவதும் அந்தந்த பகுதிகளில் மரங்களை வெட்ட பா.ம.க. போராட்டம் நடத்தும். இதற்காக ஒன்றிய அளவில் 100 இளைஞர்கள் தயார் செய்யப்படுவார்கள், அவர்களுக்கு மரம் வெட்டும் பயிற்சியும் வழங்கப்படும்

சித்திரம் நன்றி: வினவு

வர்தா புயல் வந்து சாய்த்தது போக மீதம் இருக்கும் மரங்கள் நம்மை எதிர்பார்த்து காத்திருக்கின்றன. தற்போது தமிழக சாலைகளில் நடிகர் விவேக் புண்ணியத்தில் நிறைய மரங்கள் உருவாகி இருக்கிறது. இதை நாம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். நகரம், ஒன்றியம், மாவட்டம் அளவில் அனைவருக்கும் பா.ம.க. அரசியல் பயிலரங்கில் மரம் வெட்டும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அதை நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு டாக்டர் ராமதாஸ் பேசினார். கூட்ட முடிவில் கலந்து கொண்ட அனைவருக்கும் புத்தாண்டை முன்னிட்டு இலவச கோடாரிகள் வழங்கப்பட்டதாக நமது கப்ஸா நிருபர் தெரிவிக்கிறார்.

There are no comments yet