சென்னை: சின்னம்மா அதிமுகவின் புதிய பொதுச்செயலாளராக பதவி ஏற்றுள்ள நிலையில், ஜெயலலிதா படம் போட்ட காலண்டர்கள் குப்பைத் தொடியில் வீசப்பட்டுள்ளன. இரும்புப் பெண்மனி என்ற பெயரெடுத்த ஜெயலலிதா அடிமட்ட தொண்டர்களுக்கு பதவி கொடுத்து அழகு பார்ப்பவர் என் கூறப்படுவதுண்டு. அவராலேயே இன்று பலர் அமைச்சர்களாகவும் எம்.எல்.ஏ.க்களாகவும் வலம் வருகின்றனர். ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்ட பலர் இன்று அம்மாவை மறந்து, சின்னம்மா துதி பாடி வருகின்றனர். அம்மா உயிருடன் இருக்கும்போது அவரது படம் போட்ட காலண்டர்கள் வினியோகம் போட்டிபோட்டு நடக்கும். ஆனால் கடந்த டிசம்பர் 5ஆம் தேதி ஜெயலலிதா மரணமடைந்தார். இதனால் அவரது படம் போட்டு சிவகாசியில், காலண்டர் தயாரிக்க ஆர்டர் கொடுத்த நிர்வாகிகள் மற்றும் அமைச்சர்கள் தங்களின் ஆர்டரை உடனடியாக ரத்து செய்தனர். மேலும் சசிகலா படத்துடன் காலண்டர் தயாரிக்கவும் அவர்கள் ஆர்டர் கொடுத்துள்ளனர். இதைக்கண்டு மனம் குமுறிய அண்ணன் மகள் தீபா மக்களிடம் நீதி கேட்கும் பயணத்துக்கான டிரயின் டிக்கட்டுகளை கேன்சல் செய்துவிட்டதாக நமது கப்ஸா நிருபர் தெரிவிக்கிறார்.

அத்தையின் உருவம் தன்னைப் போலவே புசு புசு என்று ‘பப்ளிமாஸ்’ கணக்காக இருப்பதால், அதை வினியோகித்தால் வீட்டில் மாட்டி தினமும் தேதி கிழிக்கும் அடிமட்ட தொண்டர்கள், ஆர்.கே நகர் தொகுதியில் தேர்தல் பேனர்கள், தட்டிகள் போன்றவற்றில் தீபாவின் படத்தை ஜெயலலிதாவின் படத்துடன் குழப்பிக்கொண்டு விடுவார்கள். அம்மா உயிருடன் இருக்கிறார் என்றெண்ணி மொத்த ஓட்டுக்களையும் குத்தி விடுவார்கள். அதனாலேயே காலண்டர்களை சின்னம்மா குப்பையில் வீச சொல்லி தன் தோல்வி பயத்தை காட்டிவிட்டார்! என்று கூறி கண்கலங்கினார். எம்.ஜி.ஆர் இன்னும் உயிருடன் இருக்கிறார் என்று நம்புபவர்கள் தமிழ்நாட்டில் இருப்பதும், அவ்வப்போது வாக்காளர் அடையாள அட்டை, ரேசன் கார்டுகள், ஆதார் அட்டை, சமயங்களில் பணக் கட்டுகள் குப்பை தொட்டியில் அரசு ஊழியர்கள், அதிகாரிகள் போடுவது சகஜம் தான். குப்பை தொட்டியில் வீசப்படும் பெண் குழந்தைகளுக்கு ‘தொட்டில் குழந்தை’ திட்டம் கொண்டுவந்த அம்மாவுக்கு நேர்ந்த கதியைப் பார்த்தீர்களா?” என்று வராத கோபத்தை வரவழைத்துக் காட்டினார்.

பகிர்

There are no comments yet