சென்னை: ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவுக்கு, வேலுார் மாவட்டத்தில் ஆதரவு அதிகரித்து வருகிறது. ஜெயலலிதா தீபா பேரவை துவங்கப்பட்டு, தீவிர உறுப்பினர் சேர்க்கையும் நடந்து வருகிறது. இந்நிலையில், வேலுார் மாவட்டம், மாதனுார் ஒன்றியம், மின்னுார் கிளை கழக, அ.தி.மு.க., சார்பில், ஒருவர் தன் படத்தை போட்டு, தீபாவுக்கு, புத்தாண்டு, பொங்கல் வாழ்த்து தெரிவித்து, மாதனுாரில் பிரம்மாண்டமான பிளக்ஸ் பேனரை நேற்று வைத்தார். இதையடுத்து, நேற்று காலை தீபாவை சந்திக்க, சென்னைக்கு புறப்பட்டு சென்றார் .

அப்போது அவர் கூறியதாவது: என் பெயர் கேடி பெரியசாமி, இந்த வட்டாரத்திலேயே நான்தான் ஒரு பெரிய கேடி. என் பெயரைக்கேட்டால் நாய் கூட நடுங்கும். தீபா அரசியலுக்கு வரவேண்டும் என, அழைப்பு விடுத்துள்ளேன் . அவர் அரசியலுக்கு வராத பட்சத்தில்,நான் , அ.தி.மு.க.,வில் இருந்து விலகி, தி.மு.க., அல்லது பா.ஜ., கட்சியில் சேர முடிவு செய்துள்ளேன். இதனால் அதிமுக உடைந்து விடும் என்று கூறினார்.

இது குறித்து அதிமுக அடிமை ஒருவர் கூறும்போது: உண்மையான உணர்ச்சியுள்ள மானமுள்ள அதிமுக தொண்டர்கள் திமுக என்ற ஒநாயிடம் தஞ்சம் போகமாட்டார்கள். அதாவது சோரம் போகமாட்டார்கள் அது உறுதி! திமுக காரனே திமுகவில் சேரும் கபடநாடகத்தை எங்களிடம் காட்டாதீர்கள். எங்களுக்கு சசி தரப்பு பிடிக்கவில்லை என்பதால் கட்சியை விட்டெல்லாம் போகமாட்டோம் போராடி எதிரியை வீழ்த்துவோம். 2006- 2011 வரை பார்த்துமா மக்கள் திமுகவை ஆதரிப்பார்களா? அதிமுக தொண்டன் ஈனப்பிறவியில்லை திமுகவை ஆதரிக்கவும் அதில் தொண்டனாவதற்க்கும்!அதிமுக கட்சி நிர்வாகிகளாகயிருந்தவர்கள் வேண்டுமானால் பணத்தை காப்பாற்ற போய் சேர்ந்திருக்கலாம்! திமுகாவில் அத்தகையவர்கள் தான் இப்போது உள்ளார்கள் தொண்டர்கள் இல்லை புரிந்து கொள்ளுங்கள் என்று பொரிந்து தள்ளினார்.

There are no comments yet