சென்னை: அரசியலை விட்டு விலக முடிவெடுத்துவிட்டதாக, அதிமுக கொள்கை பரப்பு இணைச் செயலாளர் நாஞ்சில் சம்பத் நமது கப்ஸா நிருபருக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியதாவது: தி.மு.க மேடைகளில் பீரங்கியாக முழங்கி வந்த நான், ம.தி.மு.க கட்சியை வைகோ தொடங்கியபோது அவரோடு சென்று அந்த கட்சியின் கொள்கை பரப்பு செயலாளராக செயல்பட்டேன். வைகோவின் வலதுகரமாக அறியப்பட்டேன். 2012ம் ஆண்டு அந்த கட்சியில் இருந்து வெளியேறினேன். இலக்கிய பணியில் ஈடுபட போவதாக அறிவித்தேன் . ஆனால் அதிமுகவிலிருந்து தொடர்ந்து வேண்டுகோள்கள் வந்தன. முதல்வராக இருந்த ஜெயலலிதாவே என காலில் விழுந்து கெஞ்சி இணைய அழைத்தார்.

அதனால், 2012ல் ஜெயலலிதாவைச் சந்தித்து அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டேன். இன்னோவா காரை பரிசளித்தார் ஜெயலலிதா. அதிமுக வரலாற்றிலேயே முதல் முறையாக பிரசாரத்திற்காக நிர்வாகி ஒருவருக்கு புதிய இனோவா கார் ஒன்றினை ஜெயலலிதா பரிசளித்தது அதுதான் முதல் முறை. இந்த நிலையில் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் கொள்ளவில்லை, ஜெயலலிதா அளித்த காரினை அதிமுக தலைமை அலுவலகத்தில் திரும்ப ஒப்படைத்தேன்

இனிமேல் முதலில் இருந்து ஆரம்பக்க வேண்டும். திமுகவில் ஸ்டாலின் கை கொஞ்சம் வீக் ஆக இருக்கிறது என்று செய்தி வந்தது. அவரத்தை கரத்தை கொஞ்சம் பலப்படுத்தி, மூட்டுக்கு முட்டு கொடுக்க வேண்டும் என்று அழைப்பு வந்துள்ளது. மட்டுமல்லாமல் அங்கு ஆடி கார் ரெடியாக உள்ளதாகவும் எனது முன்னாள் தளபதி சொல்லியிருக்கிறார்.

எனவே இலக்கிய பணி என்று சொல்லிவிட்டு, திமுகவில் கலக்கிய பணியை தொடர்ந்து செய்வேன். சின்னம்மாவையம், ஜெயலலிதாவையும் கெட்ட வார்த்தைகளில் திட்டி திமுகவிற்கு பிரச்சாரம் செய்வேன். திமுக அலுத்துப் போனால் திரும்பவும் வைகோவுடன் சேருவேன் என்று கூறி தனது அலமாரியில்பழைய திமுக வேஸ்டி, துண்டுகளை தேட ஆரம்பித்த்தார்.

பகிர்

There are no comments yet