சென்னை: தான் இன்னும் தேமுதிக கட்சியில் தொடர்வதாக இன்று விஜயகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறியுள்ளதாவது: கேப்டன் பதவியில் இருந்து விலகிவிட்டார் என்று இன்று அனைத்து பத்திரிகைகளிலும், தொலைக்காட்சிகளிலும் செய்தி வந்திருப்பதாக அறிந்தேன். நான் கடந்த நான்கு நாட்களாக கட்சி விஷயமாக, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போராட்டம் சம்பந்தமாக, காளைகளை அடக்கும் பயிற்சியில் இருக்கிறேன். இந்நிலையில் யாரோ விஷமிகள் கேப்டன் விலகி விட்டார் என்று பத்திரிகைகளுக்கு பொய் செய்தி கொடுத்துள்ளனர்.

என் மனைவி பிரேமலதா சொல்லும் வரை, நான் தான் தமிழ்நாட்டுக்கு கேப்டன், நானாக விலகமாட்டேன். என் கட்சியில் ஆள் இருந்தாலும் இல்லாவிட்டாலும் என் கட்சிக்கும் கேப்டன் நான் தான். பத்திரிகை செய்திகளை நம்ப வேண்டாம் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இது குறித்து தேமுதிக அலுவலகத்தில் விசாரித்தபோது, ஒருநாள் போட்டி மற்றும் டி20 கிரிக்கெட் போட்டிகளுக்கான இந்திய அணியின் கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக தோனி அறிவித்ததை விஜயகாந்த் அரை குறையாக புரிந்து கொண்டு இந்த அறிக்கையை அவசரப்பட்டு வெளியிட்டுவிட்டார் என்று தெரிந்தது.

There are no comments yet