சென்னை: சென்னையில் சமீபத்தில் நடைபெற்ற திமுக பொதுக்குழுவில் கட்சியின் செயல் தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டார். திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. தலைவருக்கு உள்ள அனைத்து அதிகாரங்களும், செயல் தலைவருக்கு வழங்கப்படுவதாகவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்தை பொதுச்செயலாளர் இளைஞார் அன்பழகன் முன்மொழிய, தம்பி துரைமுருகன் வழிமொழிந்துள்ளார். திமுகவின் சட்டவிதி 18ல் திருத்தம் செய்யப்பட்டு, அவர் செயல் தலைவராக ஆக்கப்பட்டார் திமுக தலைவர் கருணாநிதி சில காலங்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டுவருவது அனைவரும் அறிந்ததே.

திமுக தலைவர் கருணாநிதியை, மு.க.அழகிரி, கனிமொழி ஒரே நேரத்தில் சந்தித்து பேசினர். இந்த நிலையில், இன்று சென்னை வந்த மு.க.அழகிரி, தனது தங்கை கனிமொழியுடன் கோபாலபுரம் இல்லத்துக்குச் சென்று கருணாநிதியை சந்தித்தனர். திமுக செயல் தலைவராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றுள்ள நிலையில், இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனால் கோபாலபுரம் பகுதியில் சில நேரம் பரபரப்பான சூழல் நிலவியது. கருணாநிதியின் அறைக்குச் சென்ற அழகிரியும், கனிமொழியும் சிறிது நேரம் அங்கு அமர்ந்திருந்தனர் உடல் நலத்தின் காரணமாக கருணாநிதி பேச இயலாத நிலையில் ட்ராகியஸ்டமி செய்யப்பட்டு இருப்பதால், அவர் இவர்களிடம் எதுவும் பேசவில்லை என்று அங்கு சுத்திக்கொண்டிருந்த ஆந்தை தெரிவித்தது.

செயல் தலைவராக ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்ட பிறகு, அழகிரியிடம் கருத்து கேட்டபோது, நோ கமெண்ட்ஸ் என்று மட்டும் தெரிவித்தார். இதில் ஏதோ உள்குத்து இருக்கிறது என்று கருதிய நமது கப்ஸா நிருபர் அழகிரி மற்றும் கனிமொழியை எடுத்த சிறப்பு பேட்டியில் இருவரும் கூட்டாக்கா கூறியதாவது: நாங்களும் அப்பா கலைஞரின் வாரிசுகள் தான். எங்கள் இருவருக்கும் தாய் வேறு வேறு, ஆனால் தந்தை ஒருவர் தான் அதை எங்கள் தானை தலைவர் கலைஞரிடம் நிரூபிக்க என் பிறப்பு சான்றிதழ், ஆதார் அட்டை, திமுக காலம் முதலே உள்தாள் ஒட்டிய ரேசன் கார்டு, பான் கார்டு அனைத்தையும் புதிதாக தயாரித்து கொண்டு வர சில காலம் ஆகி விட்டது அதற்குள் ஸ்டாலினை செயல் தலைவராக நியமித்து விட்டார் அப்பா. அது குறித்து ரெண்டில் ஒன்று பார்த்து விட்டு வழக்கு தொடுத்துவிட்டு போகத்தான் வந்தோம், ஜெயலலிதாவுக்கு அப்பல்லோவில் செய்தது போல் ட்ரகியஸ்டமி செய்ததால் அப்பா தேர்தல் மீட்டிங்கில் பேசுவது போல மைக்கில் பேசுவார் என்று நினைத்தோம் ஆனால் அமைதி காத்து விட்டார். . இந்நிலையில், திமுக தலைவர் கருணாநிதியின் மூத்த மகனான நான் திமுக தலைவராகவும் என் உடன் பிறவா தங்கை கனிமொழி, அதிமுகவில் இருக்கும் உடன் பிறவா சகோதரி போல் திமுகவின் சின்னம்மாவாக நியமிக்கப்படும் வரையிலும் என் அப்பாவுக்கு அழுத்தம் கொடுப்போம் ” என்றனர். இந்த சந்திப்பின் போது கருணாநிதி மவுனமாக கதறி அழுததாகவும், அழகிரிக்கும், கனிமொழிக்கும் ‘கமர்கட்’ கொடுத்து அனுப்பியதாகவும், அழகிரி ஒப்புக்கு சப்பானாக இருக்கட்டும் என திமுகவில் சேர்த்து கொள்ள கனிமொழி ரெகமண்ட் செய்ததாகவும் என நம்பத்தகாத வட்டாரங்களில் கூறப்படுகிறது.

பகிர்

There are no comments yet