சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது வழங்கக்கோரி தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. விருது வழங்க நீதிமன்றம் உத்தரவிட முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று உயிரிழந்த ஜெயலலிதா மெரினா கடற்கரையில் உள்ள எம்ஜிஆர் சமாதி அருகே அடக்கம் செய்யப்பட்டார். ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும், நாடாளுமன்ற வளாகத்தில் அவருக்கு சிலை வைக்க வேண்டும் என அக்கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் ரமேஷ் என்பவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது வழங்கக்கோரி பொதுநலன் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அதனை விசாரித்த நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்தது. விருது வழங்க ஹைகோர்ட் உத்தரவிட முடியாது என்றும் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பிற்கு ஹைகோர்ட் அருகில் உள்ள அம்மா உணவகத்தில் லன்ச் சாப்பிட வந்த தேங்காய் மூடி வக்கீல் நமது கப்ஸா நிருபரிடம் பேட்டி அளித்தார்: தமிழ் நாட்டு பெண் சிசு கொலையை தடுக்க ‘தொட்டில் குழந்தை’ திட்டத்தை துவங்கி வைத்தார் ஜெயலலிதா. பின்னர் சிறுமிகள் பள்ளி செல்ல விலையில்லா சைக்கிள் கொடுத்தார், +2 வில் மடிக்கணிணி கொடுதார்,

திருமண வயதுப்பெண்ணானதும் தாலிக்கு தங்கம் கொடுத்தார், பிறகு மாமியார் வீட்டுக்கு சீதனமாக கொண்டு செல்ல பேன் மிக்சி கிரைண்டர் கொடுத்தார். இவ்வளவும் செய்த ஜெயலலிதா டாஸ்மாக் என்ற அரக்கனை தெருவுக்கு தெரு வளர்த்து விட்டார். அந்த அராக் அரக்கனால் பல பெண்களில் மாங்கல்யம் பறிபோனது தான் மிச்சம். போதாகுறைக்கு 2015 ஆம் வருடம் பெய்த வரலாறு’ காணாத வெள்ளத்தில் செம்பரம்பாக்கம் ஏரியை முன்னறிவிப்பின்றி திறந்து அரிசி பொட்டலங்களில் அம்மா ஸ்டிக்கர் ஒட்டி ஏழைகளை அங்கலாய்த்தார், அல்லோல கல்லோலப் பட வைத்தார். நல்லது செய்த போதும் ஜெயலலிதா டாஸ்மாக் விஷயத்தில் விஷமத்தனதை விட்டாத ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா வழங்க உத்தரவிட முடியாது என்று அதிமுக நிர்வாகிகள் போல் நீதிபதியே கார்டனுக்கு நேரில் சென்று சொல்லிவிட்டார். அம்மாவுக்கு பாரத் ரத்னா வாங்கி கொடுத்து அதிமுகவை கைப்பற்ற நினைத்த சின்னம்மாவின் முதல் திட்டமே தவிடுபொடி ஆனதால் பொதுகுழுவில் ‘சிக்’ என உடை அணிந்த சின்னம்மா சீக்கு பிடித்த சிக்கன் போல போயஸ் கார்டனில் கலங்கி போய் உள்ளார் என்று கூறி இடத்தை காலி செய்தார்..

பகிர்

There are no comments yet