சென்னை: கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஐந்தாம் தேதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தமிழக முதல்வரும், அ.தி.மு.கவின் பொதுச் செயலாளருமான ஜெயலலிதா மாரடைப்பு காரணமாக காலமானார். இச்சூழலில், டிசம்பர் மாதம் நடைபெற்ற அ.தி.மு.கவின் பொதுக்குழு கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளராக ஜெயலலிதாவின் தோழி வி.கே.சசிகலா பதவியேற்றுக் கொண்டார்.

முதல்வர் ஜெயலலிதாவின் மறைவையடுத்து அவருடைய அண்ணன் மகள் தீபா அரசியலுக்கு வர வேண்டும் என ஒரு சிலர் வலியுறுத்தி வருவதாகக் கூறப்படுகிறது. அவருடைய அரசியல் பிரவேசம் குறித்து எதுவும் பதிலளிக்காமல் மவுனம் காத்து வந்தார் தீபா. இந்த நிலையில் தியாகராய நகரில் உள்ள அவருடைய வீட்டில் இன்று அவருடைய ஆதரவாளர்களிடம் தீபா பேசியுள்ளார். ஆதரவாளர்கள் சிறிது காலம் பொறுமை காக்க வேண்டும் என்றும், உரிய நேரத்தில் அரசியலில் நுழைவது பற்றி முடிவை அறிவிப்பை வெளியிடுவேன் என்றும் அவர் கூறினார்

இதன் பிறகு நமது கப்ஸா நிருபரிடம்மனம் விட்டு பேசிய தீபா கூறியதாவது: உயிரோட இருக்கும் போதே என் அத்தை ஜெயா என்னை தள்ளி வைத்திருந்தார். ஆனா தங்களுடைய சுயநலத்திற்கும், சசிகலா எதிர்ப்பிற்கு சில அடிமைகள் என்னை பலி ஆக்க நினைக்கிறார்கள். அது நடக்காது. சூப்புற ஸ்டார் ரஜினி மாதிரி வரேன் , வரேன்னு சொல்லிகிட்டே இருப்பேன்.

அத்தை மாதிரி எனக்கும் ஜோசியம், ஜாதக நம்பிக்கை உண்டு. மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு ஒரே ஆண்டில் (2017-ல்) குரு, ராகு- கேது, சனிப் பெயர்ச்சிகள் 2017ல் நடைபெற உள்ளன. சந்திரன், சூரியன், புதன், சுக்கிரன், செவ்வாய், குரு, ராகு, கேது, சனி என 9 நவக்கிரகங்கள் உள்ளன. நவக்கிரகங்கள் ஒவ் வொரு ராசிக்கும் இடம் பெயரும் போது ஒவ்வொரு ராசிக்கும் வெவ்வேறு விதமான பலன்கள் ஏற்படும், எனவே எனது ஜோசியர் எனது அரசியல் பயணத்தை கொஞ்சம் தள்ளி வைக்க சொல்லியுள்ளார்.

அரசியலுக்கு வருவது என் ஆசையல்ல. அனைவரின் விருப்பத்துக்கு ஏற்ப இந்த முடிவை எடுத்துள்ளேன். அரசியலுக்கு வந்து என் அத்தை மாதிரி முதல்வராக விருப்பம் உள்ளது. மக்கள் விரும்பினால் முதல்வராவேன்” என்றார் தீபா.

பகிர்

There are no comments yet