சென்னை: வாடகை வீட்டில் வசித்து வரும் நடிகை நமீதாவை காலி செய்யும்படி தொந்தரவு செய்யக்கூடாது என வீட்டின் உரிமையாளருக்கு உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எங்கள் அண்ணா, ஏய், நான் அவன் இல்லை, பில்லா, அழகிய தமிழ் மகன், ஜெகன்மோகினி உள்ளிட்ட ஏராளமான தமிழ் மற்றும் மலையாளம், தெலுங்கு, கன்னடப் படங்களில் நடித்தவர் நடிகை நமீதா (35). சூரத்தைச் சேர்ந்த துணி வியாபாரியின் மகள், துணி உடுத்தப் பிடிக்காதால் நடிகையாகி, தற்போது சென்னை நுங்கம்பாக்கம் வீரபத்திரன் தெருவில் உள்ள கருப்பையா நாகரத்தினம் என்பவருக்கு சொந்தமான வீட்டில் மாதம் ரூ. 15 ஆயிரம் வாடகைக்கு குடியிருந்து வருகிறார்.

இந்நிலையில், மோடியின் செல்லாது அறிவிப்பால் பாதிக்கப்பட்ட உரிமையாளர், வாடகையை திடீரென பன்மடங்கு உயர்த்தி, வீட்டைக் காலி செய்து கொடுக்கும்படி தன்னை தொந்தரவு செய்து வருவதாக நமீதா ஏற்கனவே நுங்கம்பாக்கம் போலீஸில் புகார் அளித்துள்ளார். தனது புகார் மீது போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி சென்னை 13-வது உதவி உரிமையியல் நீதிமன்றத்தில் நமீதா மனுதாக்கல் செய்தார். அந்த மனுவில், ‘‘நான் மாதம் தோறும் முறையாக வாடகையை செலுத்தி வருகிறேன். என்னை வீட்டில் இருந்து காலி செய்வதற்கு வீ்ட்டின் உரிமையாளர் ரவுடிகளை வைத்து பல வழிகளில் முயற்சித்து வருகிறார். அமைதியான முறையில் வசிக்க எனக்கு வாடகைதாரர் என்ற முறையில் எல்லா உரிமைகளும் உள்ளது. எனது வீட்டின் உரிமையாளர் விடுத்த வேண்டுகோளை ஏற்று ஏற்கனவே அவரது உறவினர்களின் கடைகளை பணம் வாங்காமல் திறந்த மனதுடன் குறைந்த ஆடையுடன் சென்று திறந்து வைத்துள்ளேன். அவர் என்னை வீட்டில் இருந்து வெளியேற்றினால் எனது பெயருக்கும், புகழுக்கும் களங்கம் ஏற்பட்டுவிடும். படவாய்ப்பு இல்லாததால் ஸ்டார் ஓட்டல் கட்டுபடி ஆகது. ஆகவே வீட்டைக் காலி செய்யக்கூறி தொந்தரவு செய்யக்கூடாது என்றும், வீட்டைக் காலி செய்யும் நடவடிக்கைக்கு ‘இடை’க்கால தடைவிதிக்க கோரியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த சென்னை பெருநகர 13-வது உதவி உரிமையியல் நீதிமன்ற நீதிபதி ஜி.சாந்தி நமது கப்ஸா நிருபரிடம் பேசுகையில், ‘‘ஆண் ரசிகர்களை வயது வித்யாசமின்றி அன்போடு “மச்சான்ஸ்” என்று அழைப்பவர் மழலை மொழி பேச்சுக்கு சொந்தக்காரரான நமீதா. சினிமாவில் மேலே கவர் பண்ணியிருக்கும் ஆடைகளை ‘சீ’ என்று கழற்றி போட்டு கவர்ச்சியாக நடிக்கும் அவர் தமிழ்நாட்டிலும் தமிழ் சினிமா பீல்டிலும் உள்ளவரை வீட்டைக்காலி செய்யச்சொல்லி வீட்டின் உரிமையாளர் நமீதாவுக்கு எந்த தொந்தரவும் செய்யக்கூடாது. ரசிக மச்சான்களின் மனதில் குடியிருக்கும் நமீதாவிடம் இனி குடியிருப்பு கட்டணமோ வாடகையோ கரண்ட் பில்லோ வசூல் செய்யக்கூடாது’’ என இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டேன். தேவைப்பட்டால் இந்த வழக்கில் ‘தொடை’க்கால தடை அல்லது நிரந்தர தடை விதிக்கவும் தயங்க மாட்டேன். .என்று கூறினார். தீர்ப்பை கேட்டு அங்கு குழுமியிருந்த மச்சான்ஸ் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் ஆரவாரமாக “மச்சினி நமீதா வாழ்க” என கோஷமிட்டனர்

பகிர்

There are no comments yet