சென்னை: தமிழகத்தில் பருவ மழை பொய்த்து, நீர் நிலைகள் வற்றிய தாலும், டெல்டா பாசனத்துக்கான அணைகள் மூடப்பட்டதாலும், திருச்சி, தஞ்சை, நாகை, புதுக் கோட்டை பகுதிகளில் சம்பா சாகுபடியும் காஞ்சிபுரம், திருவள்ளூர், ஈரோடு, மதுரை, தூத்துக்குடி பகுதிகளில் நெல், மஞ்சள், உளுந்து, மக்காச்சோளம் போன்றவற்றின் விளைச்சலும் கடுமையாக பாதிக்கப்பட்டது.
இதன் விளைவாக தமிழ கத்தின் பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் மாரடைப்பால் உயிரிழப்பதும், சிலர் தற்கொலை செய்துகொள்வதும் நிகழ்ந்து வருகிறது. கடந்த ஒரு மாத காலத்தில் மட்டும், 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந் தனர்.
இந்நிலையில், அமைச்சர் தங்கமணி நாமக்கல்லில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தமிழகத்தில் வறட்சியால் விவசாயிகள் தற்கொலை என்பது ஏதும் இல்லை என கூறினார். மேலும் விவசாயிகள் மரணம் என்பதும் அரசிலாக்கப்படும் விஷயமாக இருக்கிறது. விவசாயம் பாதுகாப்பு குறித்து சர்வே நடந்து வருகிறது. முழுமையான தகவலுக்கு பிறகுதான் அது குறித்து தகவலை தமிழக அரசு தெரிவிக்கும். நாமக்கல்லில் எந்த விவசாயியும் தற்கொலை செய்து கொள்ளவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். அமைச்சரின் பேச்சால் விவசாயிகள் கடும் கொந்தளிப்பில் உள்ளனர்.
இது குறித்து தனது எதிர்ப்பை தெரிவிக்க தி.மு.க., செயல் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான, ஸ்டாலின், முதல்வர் பன்னீர்செல்வத்தை சந்தித்த பின், ஸ்டாலின் கூறியதாவது: தமிழகத்தில், 90க்கும் மேற்பட்ட விவசாயிகள், அதிர்ச்சி மற்றும் தற்கொலையால் இறந்துள்ளனர். ஒவ்வொரு நாளும், ஐந்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வது தொடர்கிறது. இதற்கு காரணம், எனது அப்பா கலைஞரின் சதியால் காவிரி நீர் முழுமையாக கிடைக்காததும், வருண பகவானின் சதியால் மழை பொய்த்து விட்டதும் தான். எனவே, தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும். இக்கோரிக்கையை, தி.மு.க. சட்டமன்ற குழு லண்டன் பயணம் செய்து அங்கு விவசாயிகளின் வாழ்க்கை முறையை அறிந்து வந்து அறிக்கை சமர்ப்பிக்கும். எங்களது எம்.எல்.ஏக்கள் லண்டனில் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் தங்க முதல்வரை சந்தித்து , அரசுமுறை பயணமாக எங்களை அனுப்பி வைக்க கோரினேன். எங்கள் குழு லண்டன் சென்று தமிழக விவசாயிகளின் இறப்புக்கான காரணத்தை அறிந்து வரும், என்று கூறி நேரமாச்சு, பிளைட் டிக்கெட் புக் செய்யணும் என்று விரைந்தார்.
There are no comments yet
Or use one of these social networks