சென்னை: அதிமுகவின் பொதுச் செயலாளராக சசிகலா பொறுப்பேற்றதை ஏற்றுக் கொள்ளாத அதிமுக தொண்டர்கள் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா வாசல் முன் திரண்டு அவரை தலைமை ஏற்க அழைப்பு விடுத்தனர். அந்த வகையில் சின்னம்மாவை பிடிக்காத திமுக ஆதரவாளர்கள் சென்னைக்கு வந்து தீபா வீட்டின் முன் திரண்டுள்ளனர். தீபா ஆதரவு கோஷத்தை அடுத்து, ஜெயலலிதா போன்றே தலை மற்றும் உடை அலங்காரம் செய்து கொண்ட தீபா பால்கனியில் வந்து வணக்கம் வைத்து தரிசனம் தந்தார்.

உங்கள் அனைவரையும் விரைவில் சந்தித்து கருத்துக்களைப் பரிமாற உள்ளேன். அப்போது அனைவரின் விருப்பங்களும் கேட்டுக் கொள்ளப்படும். நமது தேவன் ஸ்டாலின் நம்மை கைவிட மாட்டார் அனைவரின் கருத்தையும் தெரிவிக்க கருத்துப் பெட்டி ஒன்றும் இங்கே வைக்கப்பட உள்ளது. அதில் உங்கள் விருப்பங்களை மனுவாகப் போடலாம். நீங்கள் ஸ்டாலின் மீது வைத்துள்ள நம்பிக்கையை நிச்சயம் நான் காப்பாற்றுவேன். நமக்கெல்லாம் ஒரு நல்ல எதிர்காலத்தை நோக்கி இந்தப் பயணம் இருக்கும். என் பெயரும், புகழும் ஓங்க வேண்டும். கர்த்தர் நம்மை கைவிடமாட்டார். நமக்கெல்லாம் கர்த்தராக செயல் தலைவர் ஸ்டாலின் உள்ளார். அவர் கட்டளைப்படி உரிய காலத்தில் நல்ல முடிவை அறிவிப்பேன் என்று மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயகுமாரின் மகள் தீபா தெரிவித்தார்.

>பின்னர் நமது கப்ஸா நிருபரிடம் பேசிய தீபா கூறியதாவது: தளபதி ஸ்டாலின் செயல் தலைவரானதை அனைவரும் சிறப்பாகக் கொண்டாட வேண்டும். எனக்கு இந்த அளவுக்கு நம்பிக்கையும், ஆதரவையும் அவர் தராவிட்டால் என்னால் இங்கு உங்களிடம் பேசிக்கொண்டிருக்க முடியாது. அவர் கட்டளைக்காக காத்திருக்கிறேன். நான் தினமும் கர்த்தரை ஜெபம் செய்பவள், இப்போது ஸ்டாலின் தான் எனக்கு கர்த்தர். உரிய காலத்தில் நல்ல முடிவை அறிவிப்பேன். சிறிது காலம் பொறுமை காத்திட அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். மக்களுக்கான பணியை தொடர காத்திருக்கிறேன் என்றார் தீபா. தனது சகோதரர் தீபக் ஆதரவு தெரிவிக்கவில்லையே என்ற கேள்விக்கு பதிலளித்த தீபா, “தீபக் எனது தம்பி இல்லை. நான் தான் ஒரிஜினல் வாரிசு. அவரை அத்தைக்கு பிடிக்காது.. அதனால் தான் என் அத்தை ஜெயலலிதா என்னை ஒதுக்கி வைத்து என்னிடம் 10 வருடங்கள் பேசாமல் இருந்தார். என்றார் உற்சாகமாக.

There are no comments yet