ஸ்டாலினின் நமக்கு நாமம் பயணத்தை காப்பி அடிக்கும் கேப்டன் – வைகோ துணையுடன் ஊர் ஊராக கட்சியினரை சந்திக்க திட்டம்

254

சென்னை: தே.மு.தி.க.,வை பலப்படுத்தும் திட்டத்துடன், அக்கட்சி தலைவர் விஜயகாந்த், சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடர் தோல்வி காரணமாக, தே.மு.தி.க.,வில் இருந்து, முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் வெளியேறி விட்டனர். அக்கட்சியின் ஓட்டு வங்கியும் சரிவடைந்துள்ளது. தற்போது, அ.தி.மு.க., – தி.மு.க., தலைமைகளில் மாற்றம் வந்துள்ளது. அதை பயன்படுத்தி, தே.மு.தி.க.,வை பலப்படுத்த, விஜயகாந்த் திட்டமிட்டு உள்ளார். இதற்காக, ‘சரக்குடன் சைடு டிஸ்’ என்ற பெயரில், விஜயகாந்த், மாவட்டம் தோறும் சுற்றுப்பயணம் செய்ய உள்ளார். அதன்படி, நேற்று முன்தினம் தர்மபுரி மாவட்டத்தில் பயணம் செய்த விஜயகாந்த், நேற்று, ஈரோட்டில் கட்சியினரை சந்தித்தார்.

நாளை, மதுரை மாவட்டம், அலங்காநல்லுாரில், ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி, விஜயகாந்த் தலைமையில் உண்ணாவிரதம் நடக்கிறது. இதுகுறித்து, தே.மு.தி.க.,வினர் கூறுகையில், ‘புதிய நிர்வாகிகளுடன், போட்டோ எடுப்பது, ஆலோசனை கேட்பது போன்ற செயல்களில், விஜயகாந்த் ஈடுபடுகிறார். இதன் மூலம், இழந்த செல்வாக்கை மீண்டும் பெற முடியும் என, அவர் நம்புகிறார். தென் மாவட்டங்களுக்கு பயணம் செய்யும் போது, மக்கள் மத்தியில் பிரபலமான வைகோவை தன்னுடன் அழைத்துச் சென்றால் நன்றாக இருக்கும் என நினைக்கிறார். வைகோவுடனான பழைய பகையை மறந்து உறவுக்கரம் நீட்ட ஆலோசனை நடந்து வருகிறது. இப்போது மக்கள் நல கூட்டணி ஒருங்கிணைப்பாளர் பொறுப்பில் இல்லாததால் ப்ஃரியாக இருக்கும் வைகோவும் கேப்டனுக்கு உதவ ரெடியாக உள்ளார் என்றனர்.

பகிர்

There are no comments yet