சென்னை: ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்தால் பிரியாணிக்கும் தடை விதிக்கவேண்டும் என்று நடிகர் கமல்ஹாசன் இந்தியா டுடே கருத்தரங்கத்தில் பேசி உள்ளார். ஜல்லிக்கட்டு போட்டிக்கு மிகப்பெரிய ரசிகன் நான் ஆவேன், ஜல்லிக்கட்டு போட்டியை மறுபடியும் தொடங்கவேண்டும், ஜல்லிக்கட்டு விளையாடிய சில நடிகர்களில் நானும் ஒருவன். தமிழன் என்று பெருமை கொள்கிறேன், இது எங்களுடைய கலாசாரம் என ஆதரவு தெரிவித்து உள்ள கமல் இப்போட்டியை வெறுப்பவர்கள் பிரியாணியையும் வெறுக்கவேண்டும் என்று சர்ச்சைக் கருத்தை கூறி உள்ளார்.

கூட்டம் முடிந்ததும், வீட்டுக்கு சென்ற கமல், தான் ஒரு ப்ராமணன் என்பதை பால்ய காலத்தில் இருந்தே மறந்த கமல், தலப்பாகட்டு பீப் பிரியாணியை தனது உதவியாளரிடம் வாங்கி வரச்சொல்லி ஒரு கை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது முஸ்லிம் அமைப்புகளை சேராத ‘பாய்’கள் சிலர் கமல்ஹாசனின் ஆழ்வார்பேட்டை வீட்டைச் சூழ்ந்து கொண்டு “பிரியாணியை தடை செய்யச் சொன்ன கலைஞானி ஒழிக இந்து முஸ்லீம் சமத்துவத்தை குழி தோண்டி புதைத்த சகுனி ஒழிக” என்று கோஷமிட்டனர். என்னடா இது விஸ்வரூபம் ஒன்னுக்கு வந்த பிரச்சனை போல விஸ்வரூபம் டூவுக்கும் இந்த ஜல்லிக்கட்’டூ’ வால் வந்த பிரச்சினை என்று உணர்ச்சியைக் கொட்டி வழக்கமான தனது பாணியில் “ஆ…ஆஆஆ” என அழுது நடித்தபடி நமது கப்ஸா நிருபருக்கு பேட்டி அளித்தார்: விருமாண்டி படத்தில் காளைகளை துன்புறுத்தி படம் எடுத்த அனுபவத்தில் சொல்கிறேன், நிஜ ஜல்லிக்கட்டில் காளைகள் துன்புறுத்தப்படுவதில்லை, மாறாக அவை தடவிக் கொடுக்கப்படுகின்றன. உலகம் அழிந்தாலும் வெளிவராத மருதநாயகம் படத்தில் கோவணம் சகிதமாக ஒரு காளை மாட்டின் மேல் சவாரி செய்து டிரைலர் வெளியிட்டேன். அப்போது படமில்லாத நேரம். அதே போல தற்போது எடுத்து முடிக்க முடியாமல் கிடப்பில் போடப்பட்ட ‘சபாஷ் நாயுடு’ பட பப்ளிசிட்டிக்காக சமயம் பார்த்துக் காத்துக் கொண்டிருந்தபோது, நண்பர் ரஜினி செல்லாது அறிவிப்பின் போது ‘புதிய இந்தியா பிறந்துள்ளது’ என்று எந்திரனுக்காக பப்ளிசிட்டி ஸ்டண்ட் அடித்து முந்திக் கொண்டார். நான் ஜல்லிக்கட்டை கையில் எடுத்துக் கொண்டேன்.

இங்கு கூடியிருக்கும் முஸ்லில் நண்பர்கள் நன்றாக ஒன்றைப் புரிந்து கொள்ளவேண்டும், நான் உங்கள் இனத்தை பெருமைப் படுத்தவே விஸ்வரூபம் முதல்பாகத்தில் பின் லேடன் வேடமிட்டு ஆப்கானிஸ்தான் தீவரவதிகளுக்கு பயிற்சி கொடுப்பது போல காட்சி அமைத்தேன். முஸ்லிம் மதத்தில் உள்ளது போல ‘பாலி காமி’ அதாவது ஒரு ஆணுக்கு பல மனைவிகள் கோட்பாட்டையும், சமீபத்தில் கவுதமி பிரிந்த போது கூட நான் தான் மும்முறை ‘தலாக்’ கூறி வெளியே அனுப்பி வைத்தேன். ஆகவே பட பப்ளிசிட்டிக்காகவும் பணத்துக்காகவும், நான் கூறும் கருத்துக்களை யாரும் சீரியசாக எடுத்துக்கொள்ளவேண்டாம். ரத்தமும் முத்தமும் என் பட விற்பனைக்கு தேவை சத்தமும் சர்ச்சையும் நான் சினிமாவில் நிலைத்திருக்கத் தேவை” என்று ரைமிங்கில் பேசி முடித்தார்.

பகிர்

There are no comments yet