ஈரோடு: தேமுதிக தலைவர் விஜயகாந்த் மிகவும் சிம்பிளான ஒரு அரசியல்வாதி. கடலூரில் 2015 டிசம்பரில், வெள்ள பாதிப்பு ஏற்பட்டபோது, வேட்டியை மடித்து கட்டிக் கொண்டு பாதிக்கப்பட்ட பகுதிகளில், சேறு, சகதி பார்க்காமல் விசிட் அடித்தார். அதேபோல சென்னையிலும், படகில் சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு வழங்கினார். இப்படிப்பட்ட விஜயகாந்த் கட்சி கடந்த சட்டசபை தேர்தலில் படுதோல்வியை சந்தித்து ஒரு சீட் கூட வெல்ல முடியாமல் போனது. விஜயகாந்த் தோல்வியைத்தான் தழுவினார். “சேராத இடம் சேர்ந்து, வஞ்சத்தில் வீழ்ந்துவிட்டார்..” என்று தேமுதிக தொண்டர்கள் மனதுக்குள் பாடி வருகிறார்கள். தேர்தல் தோல்வியோ வெற்றியோ விஜயகாந்த்தை மாற்றவேயில்லை. மனிதர், அப்படியேதான் உள்ளார். அதற்கு ஒரு உதாரணம், தற்போது நடந்துள்ளது. விஜயகாந்த் இன்று அலங்காநல்லூரில் நடந்த ஜல்லிக்கட்டு ஆதரவு ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றார்.
கவுந்தப்பாடியில் நடந்த நிகழ்ச்சியில் மனைவி பிரேமலதாவுடன் கலந்து கொண்டார். மதியம் 2.30 மணி அளவில் சென்னிமலை ரோட்டோரம் இருந்த தென்னை மர நிழலில் ஒரு வீட்டின் முன் விஜயகாந்த்தும் அவரும் மனைவி பிரேமலதா மற்றும் அவர்களுடன் வந்தவர்களும் நின்று கொண்டு மதிய உணவு சாப்பிட தொடங்கினார். தலையில் விஜயகாந்த் முண்டாசு கட்டி கொண்டு வேட்டியை மடித்து கட்டி கொண்டு பாக்கு மட்டை தட்டில் எடுத்து பரிமாறப்பட்ட உணவை, வாழை இலையில் போட்டு சாப்பிட்டார். அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகளுக்கு சாப்பிடுவது விஜயகாந்த் என அடையாளம் தெரியவில்லை. யாரோ சுற்றுலா பயணிகள் என நினைத்து கடந்துள்ளனர். இதனிடையே சென்னிமலை சென்றிருந்த, அந்த ரோட்டோர வீட்டுக்கு சொந்தக்காரரான விவசாயி முருகேஷ் மற்றும் அவரது மனைவி செல்வி ஆகியோர் விஜயகாந்த்தையும் அவர் மனைவியையும் அடையாளம் கண்டுபிடித்து இன்ப அதிர்ச்சி அடைந்துள்ளனர். விவசாயியான முருகேஷின் கஷ்ட நிலையை கேட்டறிந்த விஜயகாந்த் பொருளுதவி செய்துவிட்டு பிறகு அலங்காநல்லூர் கிளம்பினாராம்.கவுன்சிலர்களே ஸ்டார் ஹோட்டலில் சாப்பிடுவதை விரும்பும் இந்த காலத்தில், பிரபல நடிகரும், முன்னாள் எதிர்க்கட்சி தலைவரும், கட்சி தலைவருமான விஜயகாந்த் சிம்பிளாக நடந்து கொண்ட விதம் குறித்து அக்கிராமத்து மக்கள் ஆச்சரியமாக பேசி வருகிறார்கள் நல்லவரா இருந்த மட்டும் போதாது ராஜா தந்திரம் தெரிந்திருக்க வேண்டும் என்றும் கூறினர்.
இது குறித்து செய்தி சேகரிக்கச்சென்ற நமது கப்ஸா நிருபரிடம் விவசாயி முருகேஷ் கூறியதாவது: தேர்தல் தோல்வி கேப்டனை சிறிதும் மாற்றவில்லை, சினிமாவில் ஸ்டண்ட் காட்சிகளில் உடல் வலி தெரியாமல் இருக்க டாஸ்மாக் சரக்கு அடிப்பது போல் இப்போது பொதுக்கூட்ட பயண களைப்பு தெரியாமல் இருக்க எங்கள் தோப்புக்குள் கள்ளு கிடைக்கும் என்று முன்பு ஒருமுறை வைகோ சொன்னதை நினைவில் வைத்துக் கொண்டு, கரெக்டாக எங்கள் வீட்டுக்குள் வந்தார். நான் விவசாயி தற்கொலை செய்து கொள்ள இருந்தேன், கேப்டனிடம் பொருளுதவி கேடடேன், அதற்கு கள்ளு இருக்கும் வரை ஏன் தற்கொலை செய்துகொள்ளவேண்டும், என்று மொத்த கள்ளையும் ஒரே ‘கல்ப்’பாக அடித்து விட்டு, ஒரு ஆயிரம் ரூபாய் நோட்டை நீட்டினார். என்ன ‘கேப்டன் சுத்த வெள்ளந்தியா இருக்கீக இது உங்களைப் போலவே செல்லாது’ என்றதும், ஊறுகாய் வாங்கி சாப்பிட்டு விட்டு புதிய 2000 நோட்டை கொடுத்துவிட்டுப் போனார், அதை சில்லறை மாற்றுவதற்குள் தற்கொலை செய்துகொள்ள இருந்த நான் பட்டினி கிடந்தே செத்து விடுவேனே,” என்று நொந்து கொண்டார்.
There are no comments yet
Or use one of these social networks