அலங்காநல்லுார்: ”ஜல்லிக்கட்டு தடைக்கு காரணமான, ‘பீட்டா’ அமைப்பை கலைக்க வேண்டும்; நானே மூன்று மாடுகளை வளர்க்கிறேன்,” என, மதுரை அலங்காநல்லுாரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் பேசினார்.

ஜல்லிக்கட்டுக்காக தி.மு.க., நீலிக்கண்ணீர் வடிக்கிறது. அதை தடை செய்ய, கையெழுத்து போட்டது கருணாநிதி. விவசாயிகளுக்கு குரல் கொடுத்ததாக சிலர் பேசுகின்றனர். விவசாயிகளுக்காக முதலில் குரல் கொடுத்தது, தே.மு.தி.க., அவர்களுக்காக சிறை சென்றவர்கள் தே.மு.தி.க.,வினர். விவசாயிகள் தற்கொலை செய்கின்றனர். ஆனால், ‘தற்கொலை இல்லை’ என, அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். கலெக்டர்கள் பொய் சொல்லக்கூடாது. இந்த பிரச்னையை நீதிமன்றம் முடிவு செய்ய வேண்டும். அரசு, அமைச்சரவையை கூட்டி, அவசர சட்டம் கொண்டு வர வேண்டும். எதற்காக தமிழக அரசு பயப்பட வேண்டும். அவசர சட்டம் கொண்டு வர வேண்டியது தானே. நானே மூன்று மாடுகளை வளர்க்கிறேன்.இவ்வாறு அவர் பேசினார்.

விஜயகாந்தின் இந்தப்பேச்சினால் பிரேமலதா மிகவும் கோபத்தில் இருப்பதற்காக கூறப்படுகிறது. தன்னையும், தனது இரண்டு மகன்களையும் தான் கேப்டன் மூன்று மாடுகள் என்று கூறியதாக பிரேமலதா நம்புகிறார் என்று தெரிகிறது. அதனால் பிரேமலதா மேடைக்கு வராமல் காரிலேயே பல்லை நற நற என்று கடித்தவாறு உட்கார்ந்து இருந்தாக தெரிகிறது.

இதனால் விஜயகாந்த குடும்பத்தில் குழப்பம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.. விஜயகாந்தின் மகன்கள் விஜய பிரபாகரன் மற்றும் சண்முக பாண்டியன் ஆகியோர், அம்மா பிரேமலதாவுடன் தங்களை மாடுகள் என்று குறிப்பிட்டதற்கு கேப்டனின் வரவுக்காக சென்னையில் காத்திருப்பதாக தெரிகிறது.

There are no comments yet