சென்னை : தமிழகத்தின் பாரம்பரியமான ஜல்லிக்கட்டு தடைக்கு, பா.ஜ., காரணம் அல்ல என மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு தெரிவித்தார். சென்னையில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொண்ட மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு நமது கப்ஸா நிருபரிடம் தெரிவித்ததாவது: தமிழகத்தில் பண நாயக முறைப்படியே அனைத்தும் நடக்கிறது. பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்கு தமிழகத்தில் நல்ல வரவேற்பு உள்ளது. ஜல்லிக்கட்டு தடைக்கு மத்தியில் ஆளும் பா.ஜ., அரசு காரணமல்ல, வெளிநாட்டு சதியே இதற்கு காரணம். இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு நடைபெற்று வருவதால் கருத்து கூற இயலாது.

ஜல்லிக்கட்டு என்பது தமிழர்களின் பராம்பரியம் என்பது நீங்கள் தான் கூறுகிறீர்கள், இதற்கு எங்கும் ஆதாரம் இல்லை. அமேரிக்காவின் புதிய ஜனாதிபதியாக டொனால்டு ட்ரம்ப் பதவி ஏற்றபின் அவரிடம் ஜல்லிக்கட்டு குறித்து பேச்சு நடத்தி முடிவெடுப்போம். அதுவரை நீங்கள் பொறுத்திருக்க வேண்டும் என்று கூறினார்.Bull_Taming1

பன்னீர் செல்வம் தற்போது முதல்வராக இருக்கிறார். இவர் சின்னம்மாவால் தேர்தெடுக்கப்பட்ட முதல்வர். ஜெயலலிதா இருந்த போதே அவர் முதல்வராக பணியாற்றியுள்ளார். சசிகலாவைப் பற்றியும், அவர் எப்படி செயல்படுவார் என்பது பற்றியும் யாருக்கும் தெரியாது, ஆனால் அவர் முதலவர் ஆனால் எங்களுக்கு பிரச்சினை வரும். தமிழகத்தில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. அடுத்த தேர்தலில் அந்த வெற்றிடத்தை பாஜக நிரப்ப அடுத்த தேர்தலில் டெண்டர் விடுவோம். மத்திய அரசு என்றைக்கும் தமிழக அரசின் எதிரியான நண்பன்தான். தமிழகம் டாஸ்மாக்கில் வளர்ச்சி பெறும் மாநிலமாக உள்ளது. முதல்வர் பன்னீர் செல்வத்திடம் மத்திய அரசு மாநிலத்திற்கு தேவையான உதவியை செய்ய தயாராக இருப்பதாக பிரதமர் மோடி ஏற்கெனவே கூறி இருந்தார் அதே போல தேவையான உதவிகளையும் மத்திய அரசு செய்து வருகிறது. அதை நீங்கள் காவேரி, உதய், மற்றும் ஜல்லிக்கட்டு விஷயங்களில் பார்க்கலாம் என்றும் வெங்கையா நாயுடு கூறினார்

பகிர்

There are no comments yet