புது டெல்லி: தமிழக்தின் பல்வேறு பிரச்சினைகளை தீர்க்கக் கோரி தமிழக அரசியல்வாதிகள் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதுவது இப்போது பேஷன் ஆகி விட்டது. காவிரி பிரச்சினையிலிருந்து, ஜல்லிக்கட்டு, பொங்கல் விடுமுறை வரை முதல்வர் பன்னீர் செல்வம் முதல், லெட்டர் பேடு கட்சிகள் வரை கடிதம் எழுதி எழுதி தமிழகத்தில் காகித பற்றாக்குறை ஏற்பட்டது தான் மிச்சம்.gauthami-modi

இந்நிலையில் தமிழகத்தில் இருந்து வரும் கடிதங்களை படிக்கவும், மேனேஜ் செய்யவும் டெல்லியில் பிரதமர் அலுவலகத்தில் கூடுதலாக இரன்டு பணியாட்களை பிரதமர் நியமனம் செய்துள்ளதாக வந்த செய்தியை அடுத்து, நமது கப்ஸா நிருபர் டெல்லி சென்று அந்த அலுவலகர்கள் எடுத்த பேட்டியில் அவர்கள் கூறியதாவது: முன்பாவது அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவின் கடிதங்கள் மட்டும் தான் வாரம் ஒன்று அல்லது இரண்டு வரும். ஜெயலலிதா மறைந்த பிறகு பன்னீர் செல்வம் தனியாகவும், சின்னம்மா சசிகலா தனியாகவும் ஒரே விஷயத்தை வெவ்வேறு லெட்டர் பேடில் எழுதுகிறார்கள். போதா குறைக்கு செயல் தலைவர் ஸ்டாலின் நானும் இருக்கிறேன் என்று கடிதம் எழுதுகிறார். அவ்வப்போது பேட்டி மட்டும் கொடுத்து வந்த திருநாவுக்கரசரும், நம்ம கேப்டனும் இப்போ மாறீட்டாங்க, ஏதாவது ஒண்ணுன்னா மோடிக்கு லெட்டர் எழுதுகிறார்கள். அதனால வர்ற லெட்டர்களை கிழிச்சு போடவே எங்களுக்கு நேரம் பத்தாம ஓவர் டைம்ல் வேலை பார்க்கிறோம் என்றனர். அப்போ லெட்டர்களை மோடி படிக்காமாட்டாரா என்று கப்ஸா நிருபர் அப்பாவியாய் கேட்டபோது ‘நீங்க வேற அவருக்கு இதைவிட முக்கியமா கவுதமி மாதிரி ஆளுங்களை சந்திக்கிறதும், உத்திர பிரதேச தேர்தலில் எப்படி தில்லுமுல்லு செய்றதுன்னு அமித் ஷா கூட ஆலோசனை பண்ணவே நேரமில்லை’ என்று கூறி கிழிப்பு வேலையை தொடர்ந்தனர்.

பகிர்

There are no comments yet