நியுயார்க் : அமெரிக்காவின் அடுத்த அதிபராக தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கும் டொனால்ட் டிரம்ப், ஜனவரி 20 தேதி தான் பதவி ஏற்கிறார். அதற்குள் பல சர்ச்சைக்குள் சிக்கி வருகிறார். அவரது சொந்த மருமகனான ஜராட் குஷ்னரை மாளிகையில் தனக்கு ஆலோசகராக டிரம்ப் நியமித்திருக்கிறார். மாமாவுக்கு மருமகனே ஆலோசகரா என்று இப்போதே அமெரிக்காவில் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இதனால் நியாயமான ஆலோசனை கிடைக்காது என்றும் பாரபட்சமான ஆலோசனைகளே கிடைக்கும் என்றும் எதிர்க்கிறார்கள். சட்டப்படி இது தப்பு என்றும் வாதிடுகிறார்கள். ஏற்கனவே சொந்தக்காரர்களை அரசு உயர் பதவியில் அதிபர் தன்னிச்சையாக நியமிக்கும் நிலையை தடுக்க இருந்த சட்டம் 1967 உடன் செயல் இழந்து விட்டது. அப்போது, அதிபராக இருந்த ஜான் கென்னடி, தன் சொந்த தம்பியையே அட்டர்னி ஜெனரலாக நியமித்தார். எனவே அந்த சட்டம் தன்னை கட்டுப்படுத்தாது என்கிறார் குஷ்னர்.

இது குறித்து மேலும் விபரமறிய ஸ்கைப் காலில் நமது கப்ஸா நிருபரிடம் ஆங்கிலத்தில் அளித்த பேட்டியின் தமிழாக்கம்: “தமிழ் ஈன தலைவர் கருணாநிதிக்கும் எனக்கும் நிறைய ஒற்றுமை உள்ளது. அவரும் டிவி சானல் நடத்துகிறார், நானும் நடத்துகிறேன். தி.மு.கழகத்தில் எப்படி வாரிசு அரசியலை புகுத்தி சீனியர்களை தவிடு பொடியாக்கி ஓரமாக உட்கார வைத்து சொந்த மகனை கட்சி செயல் தலைவராக்கிய ராஜ தந்திரி அவர். ஏற்கனவே ஆட்சியில் இருந்த போது முன்னோட்டமாக ஸ்டாலினை துணை முதல்வராக நியமித்து சீனியர்களுக்கு சீனி மிட்டாய் தந்தவர். தவிர அவருக்கு எதிரி ஜெயலலிதா என்ற பெண்மணி, எனக்கு எதிராக நின்றவரும் ஹிலாரி என்ற பெண் தான். அதிலும் ஒற்றுமை உள்ளது. நீண்ட நாட்களாக அவரது அரசியல் தொண தொணப்புகளையும், அராஜக நடவடிக்கைகளையும் அடாவடி பேச்சுக்களையும், கிருத்திருவம் பிடித்த மக்கள் விரோத கொள்கைகளையும் உன்னிப்பாக கவனித்து வருகிறேன். பெண்களை கொச்சையாக திட்டுவதில் அவருக்கு நிகர் நானே. திமுக உருவான காலம்தொட்டே இருக்கும் நெடுஞ்செழியன், அன்பழகன் போறோருக்கு கல்தா கொடுத்த தந்திரத்தை அவரிடம் இருந்து கற்று, முதல் கட்டமாக என் மாப்பிள்ளையை சட்ட ஆலோசகராக நியமித்துள்ளேன்.adengaappa-0119

நான் கேள்விப்பட்டதில், நமக்கு நாமே பயணம் செயல் தலைவர் ஸ்டாலின் மருமகன் சபரீசன் எண்ணத்தில் உதித்த திட்டம் என்று கூறப்பட்டது. அதுபோலவே என் மருமகன் ஜராட் குஷ்னரை உருவாக்கியுள்ளேன். ஸ்டாலின் சுற்றுப்பயணத்தில் கலர் கலராக உடுத்தியிருந்த ஆடைகள் முதல் அனைத்து விஷயங்களும் சபரீசன் திட்டமிட்டார். எனக்கு தேவையான சூட்டுகளை என் மருககன் குஷ்னர் வடிவமைப்பார். மகனை வாரிசாக கட்சியில் நுழைப்பது ஓல்டு பேஷனாகி விட்டது தவிர வீட்டோட மாப்பிள்ளையாக உள்ளவர்களுக்குத்தான் மான ரோஷம் இருக்காது அவர்கள் நாம் சொன்ன பேச்சைக் கேட்பார்கள். போகப் போக என் மாமன் மச்சான் என அனைவரையும் ஒருவர் விடாமல் அரசுப் பணிகளில் நுழைத்துவிட்டு, அமெரிக்காவை ‘டல்’லரசாக ஆக்கி தீவிரவாதிகளிடம் அடிமை நாடாக ஆக்கிவிட்டு உலக வரைபடத்தில் இல்லாத தீவு ஒன்றை வாங்கி செட்டிலாகும் திட்டம் வைத்துள்ளேன்.” என்றார்.

பகிர்

There are no comments yet