புது டெல்லி: அமேசான் நிறுவனத்தின் கனடா பிரிவு இணையதளத்தில் இந்திய தேசியக் கொடி வடிவிலான கால் மிதியடி விற்பனைக்கு வைக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இணையதள வர்த்தகத்தில் முன்னணியில் உள்ள அமேசான் நிறுவனத்தில் கனடா பிரிவு இணையதளத்தில் இந்திய தேசியக் கொடி நிறத்திலான மிதியடிகள் இந்தியாவை அவமதிக்கும் விதமாக இருப்பதாக அமேசானுக்கு எதிராக விமர்சனங்களும் கண்டனங்களும் எழுந்தது. கனடா வாழ் இந்தியர்களின் தொடர் போராட்டத்தால் அந்த பொருட்களை அமேசான் நிறுவனம் இணைய தளத்திலிருந்து நீக்கியது.
இந்தநிலையில், இந்திய தேசியக் கொடியை அவமதிக்கும் வகையிலான மற்ற பொருட்களையும் இணைய தளத்திலிருந்து உடனடியாக அமேசான் நீக்க வேண்டும். அதற்காக நிபந்தனையற்ற மன்னிப்பும் கோர வேண்டும் என்று வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார். அவ்வாறு நீக்கவில்லை என்றால் அமேசான் நிறுவன அதிகாரிகளுக்கு இந்திய அரசு விசா வழங்காது என்றும், ஏற்கனவே வழங்கப்பட்ட விசாக்களையும் மறுபரீசீலனை செய்யும் என்று சுஷ்மா சுவராஜ் டுவிட்டர் மூலம் எச்சரித்துள்ளார். இதுகுறி்த்து விளக்கம் அளித்துள்ள அமேசான் நிறுவனம், இந்திய தேசியக் கொடி நிறத்திலான மிதியடிகள் அமேசானில் விற்பனை செய்யப்படவில்லை. இதுகுறித்து உயர் அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும் என தெரிவித்துள்ளது.
இது குறித்து ஸ்கைப் சேட்டிங்கில் சுஷ்மா அமேசானுக்கு சொன்ன யோசனை குறித்து கப்ஸா நிருபருக்கு அளித்த பேட்டி: இந்தியா என்றால் முன்பெல்லாம் காந்தியும் நேதாஜியும் தான் வெளிநாட்டவர் நினைவுக்கு வருவார்கள். உயர்மதிப்பு ரூபாய் செல்லாது அறிவிப்பிற்கு பிறகு மோடிஜி தான் இந்தியாவின் சூப்பர் ஸ்டார். தவிர கேஷ்லெஸ் எகானமி, டிஜிட்டல் இந்தியா, தூய்மை இந்தியா, போன்ற அதிரடி மக்கள் விரோத கொள்கைகளின் பிதாமகன் மோடி தான். இந்திய கொடியை குடிமக்கள் குடியரசு தினத்திற்கும், சுதந்திர தினத்திற்கும் சட்டையில் குத்திக் கொள்ளுவதே கொடியேற்றத்திற்கு பிறகு கிடைக்கும் ஒன்னறை அனா புளிப்பு மிட்டாய்க்காக தான். அதை அச்சிட்டு விற்றால் ஒன்றுக்கும் உதவாது. அதை விடுத்து மக்கள் மத்தியில் பிரபலமாக உள்ள மக்கள் விரோத பிரதமர் மோடியின் படத்தை உள்ளாடைகள், காலணிகள், டாய்லட் பேப்பர்கள், ஆஸ்பத்திரியில் பயன்படுத்தபடும் குப்பை கூடை கவர்கள் போன்றவற்றில் அச்சிட்டு விற்றால் விற்பனை அள்ளும். அன்னிய செலவாணி பெருகும். ஏடிஎம் மில் கால் கடுக்க நிற்கும் பொதுமக்கள், அதற்காகவாவது மோடி மீதுள்ள கடுப்பில் பணமில்லா பரிவர்த்தனைக்கு மாறி, பசிமயமான டிஜிட்டல் யுகத்திற்கு தயாராவார்கள். ஏற்கனவே ஜியோ விளம்பர சூட்டிங்கில் மோடி எடுத்துக் கொண்ட பெரிய அளவிலான புகைப்படங்கள் என் பென் டிரைவில் உள்ளது. அதை உங்கள் பயன் பாட்டிற்காக ஈமெயில் அனுப்பி வைக்கிறேன்.” என்று யோசனை கூறினேன் என்றவாறு தனது விலை உயர்ந்த செல்போனில் அமசான் ஆப்பை டவுன்லோடு செய்ய ஆரம்பித்தார்.
There are no comments yet
Or use one of these social networks