ஆராய்ச்சி மாணவி அன்னபூரணாவை சின்னாபின்ன படுத்திய போலீஸ், சின்னம்மா ஆட்சியின் அவலம் – கேப்டன் காட்டமான பேட்டி

488

சென்னை: கோயம்பேடு பேருந்து நிலையத்தில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த ஆராய்ச்சி மாணவியை லத்தியால் போலீசார் அடித்து துன்புறுத்தினார்கள். இதுதொடர்பான விசாரணையை தானாக முன்வந்து மனித உரிமை ஆணையம் ஏற்றது. இதை சுட்டிக்காட்டி, கேப்டன் விஜயகாந்த் சின்னம்மா ஆட்சியில் பெண்களுக்கு பாதுகப்பில்லை என பேட்டி அளித்துள்ளார்.

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார் ஆராய்ச்சி மாணவி அன்னபூர்ணா. அவரை பாலியல் தொழிலாளி என்றெண்ணி தகாத வார்த்தைகளில் பேசி, லத்தியால் அடித்து போலீசார் துன்புறுத்தியுள்ளனர். இதுதொடர்பாக, அப்போது, கோயம்பேட்டில் பொங்கல் சிறப்பு பேருந்துக்கான முன்பதிவு மையத்தை தொடக்கி வைக்க வந்த போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரிடம் அன்னபூர்ணா நேரில் புகார் மனு கொடுத்தார். போலீசார் நடந்து கொண்ட விதத்தை எடுத்துரைத்தார். பின்னர், செய்தியாளர்களையும் அவர் சந்தித்து தனக்கு நேர்ந்த அநீதியை செல்போனில் படம் பிடித்து வைத்திருந்ததை காட்டினார். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தக் காட்சிகள் தொலைக்காட்சிகளில் ஒளிப்பரப்பப்பட்டன. இந்தக் காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு, மாநில மனித உரிமை ஆணையம் தானாக முன் வந்து விசாரணை செய்வதாக அறிவித்துள்ளது. ஆராய்ச்சி மாணவி தாக்கப்பட்டது தொடர்பாக 8 வாராத்தில் பதில் அளிக்க வேண்டும் என்று போலீஸ் துறைக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது மனித உரிமை ஆணையம். மேலும், இந்தப் புகாரை உதவி ஆணையர் தலைமையில் விசாரிக்க வேண்டும் என்றும் மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இதைக் கேள்விப்பட்ட கேப்டன் விஜயகாந்த், மிக அருகில் உள்ள கோயம்பேடு தேமுதிக கட்சி அலுவலகத்தில் ஆட்கள் இல்லாத்ததால் தன்னந்தனியாக ரோட்டைக் கடந்து நடை பயணமாக பேருந்து நிலைய நடைமேடைக்கு வந்து நமது கப்ஸா நிருபரிடம் பேட்டி அளித்தார்: “பேருந்து நிலையத்தில் ஆராய்ச்சி மாணவி தாக்கப்பட்டதை வன்மையாக கண்டிக்கிறேன். சின்னம்மா ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை. சிறந்த இந்திய ‘குடி’மகன் விருது பெற்றவன் என்ற முறையில் சின்னம்மாவை வன்மையாக கண்டிக்கிறேன். பொதுமக்கள் தீபா வீட்டின் முன் இன்று தவம் கிடக்கிறார்கள், கடந்த 20 ஆண்டுகளாக மாற்று தலைமை வேண்டும் என்று நினைக்காத மக்கள், திமுக அதிமுகவிற்கு மாற்றாக எங்கள் மக்கள் நல கூட்டணி தேர்தலில் போட்டி இட்ட போது அதரிக்க தவறிய மக்கள் பெண்களுக்கு எதிரான சின்னம்மாவின் அராஜக ஆட்சியை கண்டு வெகுண்டு எழுந்து போராட வேண்டாமா? மக்களே இப்போதாவது திருந்துங்கள், ஜல்லிக்கட்டு விவகாரத்தில் மீண்டும் ஒரு பீனிக்ஸ் பறவையாக உயிர்த்தெழுந்துள்ள தேமுதிகவிற்கு ஆதரவளிக்க சின்னம்மா முதல்வர் பதவி விலக வேண்டும் என்று போரட்டத்தில் குதியுங்கள்” என்றார், அருகில் நின்றிருந்த பிளாட்பார பிச்சைக்கரார் ஒருவர் ‘கேப்டன் ஜி இன்னமும் தமிழக முதல்வராக ஓ.பி.எஸ் தான் இருக்கிறார் என்று காதை கடிக்கவும், தனது டிரேட் மார்க் ஸ்டைலில் நாக்கை கடித்தவர், ‘நேத்து வாங்குன டாஸ்மாக் சரக்கு போலியானது போல், குருவி மூளையை மேலும் குழப்பிவிட்டதே, இதற்காகவும் சின்னம்மா குடிமகன்களிடம் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்” என்று எஸ்கேப் ஆனார்.

பகிர்

There are no comments yet