புது டெல்லி: சுப்ரீம் கோர்ட்டு தடை உத்தரவால் கடந்த சில ஆண்டுகளாக தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவது தடைபட்டுள்ளது. ஆனால், இந்த ஆண்டு கண்டிப்பாக ஜல்லிக்கட்டு போட்டி நடந்தே தீரும் என்று தமிழக மக்கள் மற்றும் இளைஞர்கள் களத்தில் இறங்கி போராடி வருகின்றனர். இந்நிலையில், அதிமுக எம்.பி.க்கள், ஜல்லிக்கட்டு போட்டி இந்த ஆண்டு நடைபெற அவசர சட்டம் இயற்ற வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி பிரதமரிட்ம் மனு கொடுக்க நேற்றே டெல்லி சென்றனர். பிரதமர் சந்திக்க மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் வேறு வழியின்றி மத்திய சுற்றுசூழல்துறை அமைச்சர் அனில்மாதவ் தவே-ஐ சந்தித்து மனு கொடுத்தனர்.

மனுவில், இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் வகையில், காட்சிபடுத்தும் பட்டியலில் இருந்து காளைகளை நீக்கி, அவசர சட்டத்தை உடனே பிறப்பிக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. மனுகொடுத்துவிட்டு வெளியே வந்த அதிமுக எம்.பி.க்கள் குழு தலைவர் தம்பிதுரை நமது கப்ஸா நிருபரிடம் கூறியதாவது: “நம் பாரத பிரதமர் மோடி நமீதாவை கூட்டி வராததால் எங்களை சந்திக்க மறுத்துவிட்டார். உச்ச நீதிமன்றம் உத்திரவிட்டும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு மறுக்கிறது, அப்போதும் அதிமுக எம்.பி.க்கள் பிரதமர் மோடியை சந்திக்க சென்றார்கள் முடியவில்லை, இந்த நிலையில் நடிகை கஜோலுடன் நாட்டு நலன் பற்றி பேசிக்கொண்டிருக்கும் படத்தை வெளியிட்டு கடுப்பேற்றினார்.

கமலைப் பிரிந்த கையோடு கௌதமி டெல்லி சென்று மோடியை சந்தித்தார். மோடி நேரம் ஒதுக்கினார். தனது கேன்சர் விழிப்புணர்வு அமைப்பு குறித்து உரையாடி விட்டு வந்தார் கௌதமி. ‘காதல் செய்வீர்’ என்ற தமிழ் படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் சஞ்சனா. தெலுங்கு, கன்னட மொழிகளில் முன்னணி நடிகையாக இருக்கிறார். இவர் பிரபல நடிகை நிக்கி கல்ராணியின் சகோதரி ஆவார். சஞ்சனா சமீபத்தில் டெல்லி சென்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து குழந்தை பெற்றுக்கொள்ள லைசென்ஸ் முறையை அறிமுகப்படுத்த வேண்டும் என்று வற்புறுத்திவிட்டு வந்தார். பிரபல மாடலும் நடிகையுமான மேக்னா படேல் 2014ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலின் பாஜகவிற்கு ஆதரவாக களமிறங்கினார். மோடி அலை வீசிய அந்த நேரத்தில் தாமரை மலர்களை தன் உடல் மீது போர்த்தி போஸ் கொடுத்தார். பிறகு ஆடைகளின்றி மோடி படத்தை மட்டும் தன் உடல் மீது வைத்துக்கொண்டு பாஜகவிற்கு வாக்கு சேகரித்தார் மேக்னா படேல், அப்போதும் மௌனம் காத்தார் மோடி.

அமெரிக்க நாட்டில் நடந்த குடியரசு தின விழாவில் கவர்ச்சி நடிகை ராக்கி சாவந்த் அணிந்திருந்த மோடி உடை சர்ச்சைக்கு உள்ளானது. இப்படி ‘மோடி’ என்றாலே ‘லேடி பித்து’ பிடித்தவர் என்ற முத்திரை நமது பிரதமர் மீது விழுந்துள்ளது. இந்நிலையில், வாடகை வீட்டின் உரிமையாளரிடம் சிக்கி சின்னாபின்னபட்டுக் கொண்டிருக்கும் ‘மச்சன்ஸ்’ நடிகை நமீதாவை சந்திக்கும் துடிப்பில் இருந்தார் மோடி, பார்த்திபனால் சீமைப்பசு என்று வர்ணிக்கப்பட்ட நமீதாவை நாங்கள் எங்களுடன் அழைத்துச் சென்றிருந்தால், மோடி நிச்சயம் நேரம் ஒதுக்கி இருப்பார். இனி தமிழ்நாட்டில் பசுமாடுகளை வைத்தாவது ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும், காளைகளுக்கு வெறும் புல்லுக்கட்டை கொடுத்து ஓரத்தில் உட்கார வைக்க வேண்டியதுதான் ” என்று, நீலிக் கண்ணீர் வடித்தார்

பகிர்

There are no comments yet