சென்னை: இளைய தலைவலி விஜய் நடித்த பைரவா படம் ஜன.12 திரைக்கு வந்துள்ளது, ஆனால் ஜன.11 அன்றே ஆன்லைனில் வெளியாகி உலகம் முழுவதும் பதிவிறக்கம் நடைபெற்று வருகிறது. பல்வேறு இணைய தளங்களில் இணைய தளத்தில், பைரவா படம் வெளியாகி இருப்பது தீவிர விஜய் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்த தகவல் வாட்ஸ்அப் மற்றும் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
அதிகாரப்பூர்வமாக பைரவா படம் வெளிவருவதற்கு முன்பே இணைய தளத்தில் வெளியாகி இருப்பதால் படத்தயாரிப்பாளர் மற்றும் படக்குழுவினர் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர். ஏற்கனவே தாணு தயாரிப்பில் ரஜினி நடித்த கபாலி படமும் இதுபோல் வெளியானது. இதுகுறித்து தாணு உயர்நீதி மன்றத்தில் பல வழக்குகள் தொடர்ந்து, இதுபோல் படங்களை வெளியிடும் பல வலைதளங்களை தடை செய்ய முயன்றும், ரஜினியின் கபாலி படம் ரிலிசாவதற்கு முன்பே வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
உயிருடன் இருந்தபோது நடிகர் விஜய்யின் ‘தலைவா’ படமும் வெளியாவதில் பிரச்சினைக்குள்ளானது, அதற்கு காரணம் பேரரறிஞர் அண்ணாவிடம் இருந்து நேரடி பைப்லைன் போட்டு விஜய் உருவானது போல் கதை அமைக்கப்பட்டிருந்தது தான். பிறகு வந்த ‘புலி’ படமும் ராணி முத்து காமிக்ஸ் கதைகளைத் திருடி ஒற்றைக்கண் பூதம், வேதாள உலகம் என்று கதையமைப்புடன் ஒரு சிறுவர் திரைக் காவியமாக மின்னியது. மண்ணைக் கவ்வியது. இணைய தள விமர்சகர்கள் பைரவா குறித்து ‘பரதன் விஜய வச்சு அஜித் ரசிகர்களுக்கு படம் எடுத்துட்டார்’ என்கிற ரீதியில் கலாய்க்க ஆரம்பித்து விட்டனர். பைரவா என்ற பெயர் வெளியான போதே விஜய் கையில் ரவை பாக்கெட்டை கொடுத்து போட்டோஷாப் செய்து ‘Buy Rava’ என்று அஜித் ரசிகர்கள் கிண்டலடித்தனர்.
தொய்வான திரைக்கதையாலும், நம்பகத்தன்மையற்ற காட்சிகளாலும் படம் தோல்வி அடைந்துவிட்டதால் கலக்கத்தில் இருந்த விஜய் நமது கப்ஸா நிருபருக்கு ஒரு ரகசியத்தை சொன்னார்: “படம் பிரிவியூ பார்த்தபோதே இது வேலைக்காவதுங்கணா என்று டைரக்டரிட மும் தயாரிப்பாளரிடமும் சொன்னேன். ஆனால் அவர்கள் என்னை உசுப்பேத்தி விட்டு காட்சிகளை மாற்றி அமைக்காமல் ரிலீஸ் செய்ய முடிவு செய்து விட்டனர். போதாக்குறைக்கு கேரளாவில் படம் ரிலீசாகது என்று எண்ணி குமரி மாவட்ட தலைவர் விஷம் குடித்து ஆஸ்பத்திரியில் இருக்கிறார். விசாரித்ததில் குமரி மாவட்ட தலைவர் இணையத்தில் விடியற்காலமே தனது மொபைல் போனில் படத்தை பார்த்து இந்த கடினமான முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது. விஸ்வரூபம் படத்தை ரிலீஸ் தேதிக்கு முன்பே இணையத்தில் வெளியிட கமல் ஹாசன் முடிவு செய்து தோற்றது போல் தோற்காமல் நான் தமிழ் ராக்கர்ஸ் இணைய தளத்திற்கு ஒரு ரேட் பேசி விற்று விட்டேன். அதன் காரணமாகத்தான் பட ரிலீசுக்கு முந்தைய நாளே இணைய தளத்தில் ரிலீசாக வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறது. இதை என் தீவிர ரசிகர்களிடம் சொல்லி விடாதீர்கள்!” என்று காதைக் கடித்தார்.
There are no comments yet
Or use one of these social networks