சென்னை: ஜல்லிக்கட்டு விவகாரத்தில் நடிகை த்ரிஷா மீது சமூக வலைதளங்களில் செய்யப்படும் விமர்சனங்கள் குறித்து நடிகர் கமலஹாசன் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு எதிராக பீட்டா அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பின் காரணமாகத்தான் உச்ச நீதிமன்றம் ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்துள்ளது.ஆனால் இந்த பீட்டா அமைப்புக்கு ஆதரவாக நடிகை த்ரிஷா செயல்பட்டு வருகிறார். அவரது இந்த நடவடிக்கை தமிழகத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த ஜல்லிக்கட்டு விவகாரத்தில் நடிகை திரிஷா இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை. ‘பீட்டா’ அமைப்பில் இருந்து வெளியேறும்படி ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் அவரை வற்புறுத்துவதற்கும் அவரிடம் இருந்து பதில் இல்லை.

இதனால் திரிஷாவை கண்டித்து டிவிட்டர், பேஸ்புக், வாட்ஸ் அப் போன்ற சமூக வலைத்தளங்களில் படங்கள் மூலம் த்ரிஷாவுக்கு எதிரான கருத்துகள் வெளியிடப்பட்டு வருகின்றன. திரிஷாவுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தி சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டு உள்ளன. அந்த சுவரொட்டியும் சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக பகிரப்பட்டது.

இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் நடிகை திரிஷா, ‘ஜல்லிக்கட்டை தொடர்ந்து எதிர்ப்பேன். நான் ஜல்லிக்கட்டுக்கு எதிராக பேசியதில்லை. தற்போது நான் என் நிலைபாட்டை தெளிவுபடுத்துகிறேன். பெண்களை அவமரியாதை செய்வதுதான் தமிழர்களின் கலாச்சாரமா? அவ்வாறு செய்பவர்கள் ,தமிழ் கலச்சாரம் பற்றி பேச வெட்கபடவேண்டும்’ என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இந்த விவாகாரத்தில் நடிகர் கமல்ஹாசன் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில், ‘”கன்னியும் வாழ நம் காளையும் வாழ வழி செய்வோம்” என்று தெரிவித்துள்ளார்.

இது குறித்து கமலுக்கு நெருக்கமான ஒருவர் நமது கப்ஸா நிருபரிடம் கூறும்போது: கவுதமி போய் விட்டதால் தனது லிவிங் டுகெதர் வாழ்க்கைக்கு அடுத்த துணையை தேடும் முயற்சியில் இருக்கிறார் கமல். அதனால் தான் திரிஷாவுக்கு சூசகமாக கன்னியும் வாழ வழி செய்வோம் ட்விட்டில் கூறியிருக்கிறார். இது இந்த விஷயம் குறித்து மேல் நடவடிக்கைக்கு திரிஷாவின் அப்பா பெர்னாட்ஷாவை மாட்டுப்பொங்கலுக்கு பின்னர் சந்தித்து பெண் கேட்க இருக்கிறார் என்று கூறினார்.

There are no comments yet