சென்னை: தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்று பலரும் போராட்டம் நடத்தி வரும் நிலையில் தமிழர்களின் கலாச்சாரத்தில் கைவைக்கக் கூடாது என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

சென்னையில் நேற்று நடந்த ஒரு விழாவில், ரஜினி, விஜய் என பலரும் கலந்து கொண்டனர். அப்போது ஜல்லிக்கட்டு மீதான தடை குறித்து ரஜினி கூறுகையில், ஜல்லிக்கட்டு தமிழர்களின் கலாச்சாரம், கலாச்சாரத்தில் எப்போதும் கைவைக்கக் கூடாது.என்ன கட்டுப்பாடு வேண்டுமானாலும் விதியுங்கள். ஆனால் ஜல்லிக்கட்டு நடத்த தடை விதிக்காதீர்கள். பெரியவர்கள் ஒரு கலாச்சாரத்தை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்கள். அதனை நாம் காப்பாற்ற வேண்டும். சில கட்டுப்பாடுகளை விதியுங்கள். ஆனால், ஜல்லிக்கட்டு நடத்தப்பட வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.

இது குறித்து மேலும் விபரமறிய, பொங்கலை தந்து மகள்களுடன், கோடம்பாக்கத்தில் உள்ள ஒரு பிரபல ஸ்டுடியோவில், கிராமம், மண்பானை, ஜல்லிக்கட்டு காளை செட்அப்பில், கொண்டாடிக்கொண்டிருந்த சூப்புற ஸ்டார் நமது கப்ஸா நிருபரிடம் கூறியதாவது கூறியதாவது: தம்பி, இப்போ தமிழ் நாட்டிலே என்னென்னமோ நடந்துகிட்டு இருக்கு. பெரியபெரிய விஷயங்களை விட்டுடறோம், ஆனா ஒண்ணுக்கும் பிரயோசனமில்லாத ஜல்லிக்கட்டை பிடுச்சிக்கிட்டு போராட்டம் பன்றோம், ஜல்லிக்கட்டு சல்லிப்பயல்களும், சில்லி பயல்களும் விளையாடறது. நமக்கு எப்போதும் பணம் கூட விளையாடறது தான் பிடிக்கும். ஹஹஹஹஹா. அதனாலதான் மோடிஜி டீமனிடைசேஷன் செஞ்சப்ப புதிய இந்திய பிறந்ததுன்னு ட்வீட் பண்ணினேன்.முரட்டுக் காளை படத்தில காளையை தொடாமலேயே, சினிமா டூப் நடிகர்களை வெச்சி காளையை அடக்கி பேமஸ் ஆனவன், அந்த மாதிரி தமிழர்களை அவங்களுக்கு தெரியாமலேயே ஏமாத்தணும்.

காவேரி பிரச்சினை, பண பிரச்சினையா, மீத்தேன், சேலம் ஸ்டீல், விவசாயிகள் சாவுக்கெல்லாம் மோடி ஜி தான் காரணம், அத பத்தியெல்லாம் நாம பேசுரமா கண்ணா, ஆனா ஜல்லிக்கட்டுன்னு சில்லித்தனாமா ரோட்டுல வந்து நிக்கிறோம். அதனால மோடி ஜி ஜல்லிக்கட்டு, டாஸ்மாக் மாதிரி சில்லறை விஷயங்களில் கைவைக்காம, பெரிய பெரிய விஷயங்களில் அவரது கவனத்தை செலுத்தணும் சொல்ல வரேன் எப்படி நம்ம ஐடியா என்று கப கப என்று சிரித்தார். அங்கே பொங்கல் வெந்து கொண்டிருந்தது, தமிழர்களின் இதயத்தைப் போல்.

There are no comments yet