சென்னை: நடிகை ரம்பா 90களில் தனது தொடையழகால் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர். உள்ளத்தை அள்ளித்தா, காதலா காதலா, வி.ஐ.பி, அருணாச்சலம் உள்ளிட்ட ஏராளமான தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். மார் கெட்டுப் போனதும், கனடாவை சேர்ந்த தொழிலதிபர் இந்திரனை திருமணம் செய்து கொண்டு கனடாவில் செட்டிலானார். இந்நிலையில் அண்ணியிடம் வரதட்சணை கேட்ட வழக்கில் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகுமாறு நடிகை ரம்பாவுக்கு சம்மன் அளிக்கப்பட்டுள்ளது. நடிகை ரம்பாவின் அண்ணன் வாசுவின் மனைவி பல்லவி. வாசு, ரம்பா உள்ளிட்டோர் வரதட்சணை கேட்டு தன்னை கொடுமைப்படுத்துவதாக பல்லவி கடந்த 2014ம் ஆண்டு ஹைதராபாத் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ரம்பா உள்பட 5 பேர் மீது வரதட்சணை கொடுமை வழக்குப்பதிவு செய்யுமாறு பஞ்சரா ஹில்ஸ் போலீசாருக்கு உத்தரவிட்டது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ரம்பா, வாசு உள்பட 5 பேர் மீது நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். அப்பொழுது ரம்பா கனடாவில் வசித்ததால் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகுமாறு அவருக்கு சம்மன் அனுப்ப முடியவில்லை. இந்நிலையில் ரம்பா நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள ஹைதராபாத் வந்தது கடந்த 10ம் தேதி போலீசாருக்கு தெரிய வந்தது. உடனே அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு ரம்பாவுக்கு சம்மன் அனுப்பியுள்ளனர்.

இது குறித்து ரம்பா கப்ஸா நிருபரிடம் தெலுங்கில் அளித்த பேட்டியின் தமிழாக்கம்: நான் கஷ்டப்பட்டு கால் வயிறு கஞ்சி குடிக்க, கால் – வயிற்று, தொடை தொப்புள் பகுதிகளை காட்டி நடித்து சினிமா ‘தொழிலில்’ சம்பாதித பணத்தை என் தொழிலதிபர் கணவர் பறித்துக் கொண்டார். கனடாவில் பதுங்கி இருந்த நான், அக்கா குஷ்புவை முன்மாதிரியாக வைத்து தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்குபெற ஹைதராபாத் வந்த போது காரில் இருந்து இறங்க முடியாமல் தொடைகள் மாட்டிக் கொண்டட்தால் போலீசார் என்னை அடையாளம் கண்டுகொண்டார்கள். உடனே சம்மனையும் கொடுத்துவிட்டார்கள். என் வயிற்றில் ஜீவன் வளரக் காரணமாக இருந்த என் கணவர், இப்போது விவாகரத்து செய்துவிட்டு ஜீவனாம்சம் தர மறுக்கிறார்.

என் அண்ணன் வாசுவின் மனைவி, அண்ணி பல்லவியிடம் வரதட்சணையாக ஒரு தொகை பெற்றுத் தரும்படி ‘உள்ளதை அள்ளித்தா’ என தொல்லை கொடுத்தேன். சினிமாவில் காலம் முடிந்தால், சீரியலுக்கு வர வேண்டியது தான், சீரியலில் குப்பை கொட்ட வேண்டும் என்றால், கணவன் மனைவியை பிரிப்பது, குழந்தையை கடத்துவது, கற்பழிப்பது, கருக் கலைப்பது, கட்டிபோட்டு சித்ரவதை செய்வது, பெரியவர்களை அவமதித்து கெட்ட வார்த்தையால் திட்டுவது, குடும்பத்தை வேரறுப்பேன் என நயவஞ்சகமாக சவால் விடுவது போன்ற கேரக்டர்களில் நடிக்க தெரிய வேண்டும். அயிட்டம் டான்ஸ் வேலைக்கு ஆகாது. எனவே தான் முதல் கட்டமாக அண்ணியிடமே வரதட்சினண கொடுமையை அரங்கேற்றி ஒத்திகை பார்த்தேன்,” என்றார். “தமிழ் தொலைக்காட்சி சீரியல்களை பார்க்கும் போது இதுவும் நியாயம் என்றே தோன்றுகிறது.” என்றார் கப்ஸா நிருபர்.

பகிர்

There are no comments yet