சென்னை:”தமிழகத்தில் இப்போது நிலவும் அசாதாரண அரசியல் சூழ்நிலையில், சோ கண்டிப்பாக இருந்திருக்க வேண்டும்,” என்று சென்னையில் நேற்று நடந்த ‘துக்ளக்’ ஆண்டு விழாவில், நடிகர் ரஜினிகாந்த் பேசினார். ‘துக்ளக்’ வார இதழின், 47வது ஆண்டுவிழா, சென்னையில் நேற்று நடந்தது. பத்திரிகை ஆசிரியர் குருமூர்த்தி தலைமை வகித்தார். விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற நடிகர் ரஜினிகாந்த் நமது கப்ஸா நிருபருக்கு அளித்த சிறப்பு பேட்டியில் கூறியதாவது: சோ இல்லாத இந்த மேடையில் உரையாற்ற வேண்டி வரும் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை.

அவர் மருத்துவமனையில் இருந்த பொழுது சென்று பார்த்தபோது மிகவும் கஷ்டமாக இருந்தது. மறைந்த முதல்வர் ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது சோவை மருத்துவ மனையில் சென்று பார்த்தார். அப்பொழுது அவர் கூறியது மாதிரியே ஜெயலலிதா உயிருடன் இருக்கும் வரை அவரும் உயிரோடு இருந்தார். அவர் உயிருடன் இருக்கும் வரை ஜெயலலிதா உயிரோடு இருந்தார்.

எனக்கு அவர் மிகவும் சிறந்த நண்பனாக, ஆலோசகராக இருந்தார். ஐ.பி,எல் போட்டிகள் துவங்கிய பொழுது இது கண்டிப்பாக பெரிய அளவில் வளர்ச்சியடையும். எனவே சென்னை அணியை வாங்கலாம் என்று அறிவுரை கூறினார். நான் தான் சிரமப்படாமல் பணம் சம்பாதிக்க, ஏமாளி தமிழன் இருக்கும் வரை எனக்கு கவலை இல்லை, ஐ.பி,எல் அணியை வாங்கி சிரமப்பட வேண்டாம் என்று கூறினேன்.

சோவிடம் வந்து ஆலோசனை கேட்காத தமிழக அரசியல்வாதிகளே இல்லையென்று கூறிவிடலாம். மாநில அரசியல்வாதிகள் மட்டும் அல்ல; பிரதமர் மோடி உள்ளிட்ட தேசியத்தலைவர்களும் சிக்கலான விஷயங்களில் அவரது ஆலோசனை கேட்டு வருவார்கள்.

தமிழகத்தில்இப்போது நிலவும் அசாதாரண அரசியல் சூழ்நிலையில் சோ கண்டிப்பாக இங்கே இருந்திருக்க வேண்டும். சோவுக்கு சின்னம்மாவையும், பன்னீரையும் பிடிக்காது.  முன்பு ஜெயலலிதாவுடன் சண்டையிட்டு என்னுடன் சேர்ந்து கருணாநிதியை முதல்வார்க்கியது போல், சோ இருந்திருந்தால் தீபா தான்  இப்போதைய முதல்வர். நமது நல்ல நேரம், அவர் டிக்கெட் சொர்க்கத்துக்கு வாங்கி, தீபாவுக்கு டிக்கெட் கிடைக்காமல் செய்து விட்டார். சோ இல்லாதா துக்ளக்கில் உயிர் இல்லை, அதுவும் இனி மெல்ல சாகும். ஆனால் மோடியும், பாஜக இருக்கும் வரை எனக்கு கவலை இல்லை என்று கூறினார்.

பகிர்

There are no comments yet